">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
டிரம்ப் எங்க..? இவர் எங்க..? தயவு செஞ்சி காப்பாத்துங்க.. இந்தியாவிடம் மருந்து கேட்டு கெஞ்சும் பிரேசில் அதிபர்
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்கா, இந்தியா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதில், கொரனா தொற்றுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். கொரானா தடுப்பு மருந்தாகவும் அம்மருந்து செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில், இந்த மருந்தை அமெரிக்காவுக்கு அனுப்பாவிட்டால் இந்தியா கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என அமெரிக்க பிரதமர் டிரம்ப் எச்சரித்திருந்தார். அதனையடுத்து அமெரிக்காவுக்கு இம்மருந்த அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பிரேசில் அதிபர் ஜேர் போல்சொனரோ இந்தியாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அனுமன் சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து லஷ்மன் உயிரை காப்பாற்றியது போல் இந்தியா ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காப்பாற்ற வேண்டும் என கெஞ்சும் வகையில் கோரிக்கை வைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, மருந்து கேட்டு மிரட்டிய டிரம்பையும், அவரையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.