More

அடுத்து யாரை இயக்குகிறார் வெற்றிமாறன்? – முடிவிற்கு வந்த குழப்பம்

வெற்றிமாறன் இயக்கத்தில் ஆர் எஸ் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். அதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் நடந்த நிலையில் கொரோனாவால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அந்த படம் முழுவதும் வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டி இருப்பதால் இப்போதைக்கு அது சாத்தியம் இல்லை என சொல்லப்பட்டது.

Advertising
Advertising

அதனால் அடுத்ததாக சூர்யா நடிக்கும் கலைப்புலி எஸ் தாணு இயக்கும் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் எனக் கூறப்பட்டது. அதற்கேற்றார்போல நேற்று வாடிவாசல் படத்தின் போஸ்டரும் வெளியானது. ஆனால் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. 

ஆனால், வெற்றிமாறன் சூரியை இயக்குவது தற்போது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் துவங்கவுள்ளது. இதற்காக படப்பிடிப்பு குழு துபாய் செல்லவுள்ளது.

Published by
adminram

Recent Posts