’தளபதி 65’ படத்தின் இயக்குனர் யார்? புதிய தகவல்

Published On: December 28, 2019
---Advertisement---

6d19653ab0f53c2b9463c24611a55135

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருப்பதாகவும் அதனை அடுத்து வெளிநாட்டில் இரண்டு பாடல்களில் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் 30ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து வரும் பிப்ரவரி மாதம் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பை முடிக்கும் விஜய் தனது அடுத்த படமான தளபதி 65 படப்பிடிப்பை மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரலில் துவங்க திட்டமிட்டு உள்ளார்

தளபதி 65 படத்தின் இயக்குனரை அவர் கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’தர்பார்’ படத்தை இயக்கி முடித்துள்ள ஏஆர் முருகதாஸ் தான் ’தளபதி 65’ படத்தை இயக்க இருப்பதாகவும் ஏஆர் முருகதாஸ் சொன்ன கதையை விஜய் ஓகே செய்து இந்த படத்தின் ஆரம்பகட்ட பணியை தொடங்க அவருக்கு அனுமதி கொடுத்து விட்டதாகவும் இது குறித்த அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அனேகமாக இந்த படம் ’துப்பாக்கி 2’ அல்லது ‘கத்தி 2’ படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Comment