காதலித்து ஏமாற்றியது யார்? – நடிகை ஆண்ட்ரியா விளக்கம்

Published On: December 26, 2019
---Advertisement---

5cfb7fba21eaa7fa97f748deec664af8

நடிகை ஆண்ட்ரியா தன்னை நடிகரும், அரசியல்வாதியும் ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறியதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஆண்ட்ரியா தான் எழுதிய புத்தகத்தில் இதுபற்றி குறிப்பிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

இதுபற்றி ஆண்ட்ரியா எந்த விளக்கமும் அளிக்காத நிலையில் தற்போது இது பற்றி அவர் பேசியுள்ளார்.

புத்தகத்தில் இருந்த கவிதையை படித்தேன். அது எதை பற்றியது எனக்கேட்டார்கள் என்னுடைய மோசமான காதல் பற்றியது எனக்கூறினேன். 10 வருடங்களுக்கு முன்பு இருந்த காதல் அது. அப்போது அங்கு செய்தியாளர்கள் யாரும் இல்லை. கேமராவும் அங்கு இல்லை. ஆனால், நான் ஒரு நடிகை.. அதுபற்றி நான் பேசியிருக்கக் கூடாது என தற்போது உணர்கிறேன். அரசியல்வாதி, நடிகர் என என்னன்னவோ எழுதினார்கள். அதற்கு விளக்கம் அளிக்க வேண்டாம் என அமைதியாக இருந்துவிட்டேன்’ எனக் கூறியுள்ளார்.

Leave a Comment