ரஜினி, கமல், விஜய், அஜீத் மனைவிகளுக்கேத் தெரியாத ரகசியம்... அவருக்குத் தான் தெரியுமாம்..! என்னங்கடா இது?
சினிமா என்பது சிறந்த பொழுதுபோக்கு சாதனம். இந்த அற்புதமான அறிவியலின் வாயிலாக சிறந்த கருத்துகளையும் வெகு எளிதாக மக்கள் மத்தியில் கடத்தலாம். அதே நேரம் இதன் மூலம் புதிய புரட்சிகளையும் உருவாக்கலாம். அப்படிப்பட்ட இந்த சினிமாவிற்கு 24 வகையான கிராப்ட்கள் தேவைப்படுகிறது. அது ஒளிப்பதிவு, நடிப்பு, இசை, இயக்கம், ஒலிப்பதிவு, ஆர்ட், தயாரிப்பு நிர்வாகம், எடிட்டிங் உள்பட அந்த 24 கிராப்ட்களும் தங்கள் வேலையைக் கனகச்சிதமாக செய்யும்போது தான் திறமையான சினிமா உருவாகிறது. அதைப் பார்த்துத் தான் நாமும் ரசிக்கிறோம்.
பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்கும்போது ஒரு சுவாரசியமான தகவலைத் தெரிவித்துள்ளார். அதில் ஆங்கர் ஒருவர் சினிமாத்துறையில் 24 கிராப்ட் னு சொல்றாங்க. அதுல எது முக்கியம் என்று கேட்கிறார். அதற்கு இப்படி பதில் சொல்கிறார் அந்தனன். என்னன்னு பார்ப்போமா...
சினிமாவைப் பொருத்தவரை 24 கிராப்ட்ஸ்சும் இல்லன்னா ஒரு படத்தை எடுக்கவே முடியாது. அதுல இது முக்கியம். இது முக்கியமல்லன்னு ஒதுக்கவே முடியாது. மண்ட வறண்டு போய் உட்கார்ந்து இருக்கும்போது ஒரு டீன்னு கேட்டா ஓடி வந்து கொடுப்பான் புரொடக்ஷன் பாய். வீட்டுல வைஃப் கிட்ட கேட்டா கூட ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்கன்னு சொல்வாங்க.
சூட்டிங் ஸ்பாட்ல நீங்க கேட்டீங்கன்னா அடுத்த ரெண்டாவது செகண்ட் கொண்டு வந்து கைல கொடுத்துடுவான். என்ன கேட்டாலும் சரி. ஒரு ஆர்டிஸ்டைக் கூலா வச்சிக்கணும்கறது தான் அந்த டிப்பார்ட்மெண்ட்டுக்குக் கொடுக்கப்பட்ட வேலை.
ஜூஸ் கேட்டாலும் வரும். என்ன கேட்டாலும் வரும். ஒண்ணுமில்ல. புரொடக்ஷன்ல ஒர்க் பண்ற ஒரு பையன் சாப்பாடு பரிமாறுறான். நீங்க அவன்கிட்ட கேட்டீங்கன்னா ரஜினி என்ன சாப்பிடுவாரு? கமல் என்ன சாப்பிடுவாரு? அஜீத் என்ன சாப்பிடுவாரு? விஜய் என்ன சாப்பிடுவாருன்னு தெரிஞ்சி வச்சிருப்பான். அவங்க அவங்க மனைவிகளுக்குக் கூட தெரியாது. கரெக்டா தெரியும்.
இவருக்கு சப்பாத்தி வச்சா குருமா பிடிக்காது. அவருக்கு வேற ஒண்ணு தான் பிடிக்கும். அந்த அளவுக்கு அவன் தெரிஞ்சி வச்சிருப்பான். இவருக்கு இது பிடிக்கும் பிடிக்காதுன்னு. இது மிகப்பெரிய விஷயம். பெரிய ஆர்ட். நமக்கு சாப்பாடு பரிமாறுறவன் தானேன்னு தெரியும். ஆனா அதுக்குள்ள ஒரு ஆர்ட் இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.