வேட்டையன் படத்தோட ரிலீஸ் தேதியில் மாற்றமா? மாரிசெல்வராஜ் படத்தில் ரஜினி இல்லையா?
ரஜினிகாந்த் இன்னும் இளமையுடன் சுறுசுறுப்பாக பல படங்களில் நடித்து வருகிறார். வேட்டையன், கூலி, மாரி செல்வராஜ் படம், ஜெயிலர் 2 என்று இந்தப் படங்களின் பட்டியல் நீள்கிறது. இந்தப் படங்களின் தற்போதைய நிலைமை எப்படி உள்ளது என பிரபல வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.
வேட்டையன் படத்துல ரஜினி சம்பந்தமான காட்சிகளை எல்லாம் எடுத்துட்டாங்க. இதைத் தாண்டி ஒரு சில காட்சிகள் எடுக்க வேண்டியிருக்கு. இருந்தாலும் ஏற்கனவே அறிவித்த ரிலீஸ் தேதியை மாற்றக்கூடாதுன்னு ஸ்பீடா ஒரு பக்கம் வேலை போய்க்கிட்டு இருக்கு. நான் விசாரித்த வரைக்கும் கடைசி நேரத்துல ஒரு மாற்றம் வரும்னு சொல்றாங்க.
கூலி திரைப்படத்துக்கு சூட்டிங் தொடங்கிட்டாங்க. ஓல்டு உட்லட்ணட்ஸ்ல தான் அதற்கான சூட்டிங் நடந்துருக்கு. அப்புறம் பிரேக் விட்டுட்டாங்க.மாரி செல்வராஜ் படம் உறுதியாகத் தெரியல. ரஜினியைப் பொருத்தவரை அந்தப் படத்துல நடிக்கலன்னு தான் தகவல்கள் வருகிறது.
ஏற்கனவே பா.ரஞ்சித் படத்துல நடித்த மனக்கசப்பு இன்னும் ரஜினியை விட்டுப் போகல. கிட்டத்தட்ட அதே ஜானரில் வரும் படம்கறதால மாரிசெல்வராஜ் இயக்கத்துல நடிப்பாராங்கறது எனக்கே டவுட்டாத் தான் இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் 2 படத்துக்கு நெல்சன் திலீப்குமார் கதை எல்லாம் தயாராக வைத்துள்ளாராம். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஜெயிலர் படத்தில் நடித்த பதன்குமார் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வழிபட வந்த போது இதுபற்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சுவாரியர் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. லைகா நிறுவனத்தைப் பொருத்தவரை அதன் ரிலீஸ் தேதி பல படங்களில் கடைசிநேரத்தில் மாறி இருக்கிறது. அதனால் இந்தப் படத்திற்கும் மாறுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. அதனால் தான் இதுவரை எந்த அப்டேட்டும் இல்லாமல் உள்ளது. என்ன தான் இருந்தாலும் படத்திற்கான அப்டேட்டுகளை ரிலீஸ் தேதி நெருங்கும்போது விடாமல் ரசிகர்களைத் தவிக்க விடுவது எந்த வகையில் நியாயம் என்றே தெரியவில்லை.