காமெடி நடிகர்களின் வாரிசு ஏன் காமெடி நடிகரா வருவதில்லை… அதுக்கு 2 காரணம் இருக்கு… என்னன்னு தெரியுமா…?

0
120

தமிழ் மட்டுமில்லை, இந்திய சினிமாவிலேயே படங்களில் காமெடி என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. ஒரு திரைப்படம் என்று எடுத்துக் கொண்டால் அப்படத்தில் காமெடி என்பது மிக முக்கியம். அப்போதுதான் மக்கள் அந்தப் படத்தை விரும்பி பார்ப்பார்கள்.

தற்போதெல்லாம் காமெடியை முழுக்க முழுக்க வைத்து படங்களும் எடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் தங்களது கவலைகளையும் மறந்து சிரிப்பதற்கு காமெடி என்பது தேவைப்படுகின்றது. அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை சினிமாவில் பல நகைச்சுவை நடிகர்கள் அறிமுகமாக இருக்கிறார்கள்.

எஸ் எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, நாகேஷ், ராமசாமி, தேங்காய் சீனிவாசன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், கருணாஸ், சந்தானம், யோகி பாபு, சூரி என பல காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் முக்கியமாக இருந்திருக்கிறார்கள். பொதுவாக காமெடி கதாபாத்திரங்களில் நடித்த பல நடிகர்கள் ஹீரோவாக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.

நாகேஷ் பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தியிருக்கின்றார். அதேபோல தற்போது சந்தானம், சூரி, யோகி பாபு, வடிவேலு, விவேக் உள்ளிட்ட நடிகர்களும் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களிலும், அதே நேரம் ஹீரோக்களாகவும் பல படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சினிமாவில் வாரிசு நடிகர்கள் என்பது புதிதல்ல. பல நடிகர்கள் தங்களது குழந்தைகளை சினிமாவில் எப்படியாவது ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று எண்ணுவது வழக்கம் தான். ஆனால் காமெடி நடிகர்கள் மட்டும் தங்களது மகன்களையோ, மகள்களையோ காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அனுமதிப்பதில்லை. அவர்களை ஹீரோவாக ஆக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள்.

அதற்கு எடுத்துக்காட்டாக பல நடிகர்களை கூறலாம். மயில்சாமி அவரது மகனை ஹீரோவாக மாற்ற தான் ஆசைப்பட்டார். காமெடி நடிகர் செந்தில் தனது மகனை ஹீரோவாக மாற்ற வேண்டும் என்று தான் எண்ணினார். ஏன் தற்போது தம்பி ராமையா கூட தனது மகன் உமாபதியை ஹீரோவாக தான் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்.

இப்படி பல நடிகர்கள் தங்களைப் போன்று காமெடி கதாபாத்திரங்களில் இல்லாமல் மகன்களை ஒரு ஹீரோவாக மாற்றி அழகு பார்க்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். அதற்கு காரணம் பெரும்பாலும் திரைப்படங்களில் காமெடி பத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும் ஹீரோவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் காமெடி நடிகர்களுக்கு கொடுப்பதில்லை. தங்களுடைய நிலைமை, தங்களது பிள்ளைகளுக்கும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் இப்படி ஒரு விஷயத்தை செய்கிறார்கள் என்று வலைப்பேச்சு பிஸ்மி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

google news