">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அது மட்டும் ஏன் ரெக்கார்ட் ஆகல? – திரௌபதி இயக்குனர் செய்த அடாவடி (வீடியோ)
இயக்குனர் மோகன் இயக்கிய திரௌபதி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பெண்களை குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த வாலிபர்கள் காதல் என்கிற பெயரில் ஏமாற்றி வாழ்க்கையை பாழ் செய்வதுவிடுகின்றனர் என்கிற கரு இப்படத்தில் கையாளப்பட்டுள்ளது.�
எனவே, சில சமூகத்தை சேர்ந்த பிரிவினர் இப்படத்தை ஆதரித்தும், சிலர் அதை எதிர்த்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம் பட ஊடகங்கள் இப்படத்திற்கு எதிரான விமர்சனங்களையே அளித்துள்ளது. இயக்குனர் மோகன் பேட்டி கொடுக்க செல்லும் இடமெல்லாம் கேள்விக்கனைகளை தாங்க முடியாமல் அவர் கோபப்பட்டு பேசுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், கலாட்டா இணையதளத்தில் மோகன் பேட்டி கொடுக்க சென்றார். அப்போது நெறியாளர் அவரை மடக்கி மடக்கி கேள்விகளை கேட்க ஒரு கட்டத்தில் கோபமடைந்த அவர் என்னை கேள்வி கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை எனக்கூறி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
இந்த தகவலை அந்த இணையதளம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. இதைக்கண்டு கோபமடைந்த மோகன் ‘ கலாட்டா இணையதளம் நேற்று ரெளபதி திரைப்படம் சம்மந்தமாக எடுத்த நேர்காணலில் நான் walked out செய்ததாக குறிப்பிட்டு யாரையோ திருப்தி படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள்.. நேர்காணல் செய்த விக்ரமன் என்பவரின் கேவலமான செயல் இது’ என பதிவிட்டுள்ளார். மேலும், நாங்கள் இருவரும் பரஸ்பரம் நன்றி கூறிவிட்டு முடிந்த அந்த நிகழ்ச்சியை இப்படி திரித்துவிட்டனர் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், நேரடியாக கேமராமேனோடு கலாட்டா இணையதளத்தின் அலுவலகம் சென்ற அவர் ‘நான் வெளியேறியதாக மட்டும் கூறியுள்ளனர். ஆனால், ஏன் நன்றி கூறிவிட்டு கிளம்பியது ஏன் ரெக்கார்ட் ஆகவில்லை. அதை ஏன் நீங்கள் காட்டவில்லை’ என வாக்குவாதம் செய்தார். அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
Galatta Media அலுவலகம் சென்று அந்த சேனல் நிர்வாக அலுவலரிடம் விசாரித்த போது என் கேமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ இது.. திடிரென்று நன்றி வணக்கம் என்று சொன்ன அந்த காட்சி மட்டும் பதிவாக வில்லையாம்.. காணவில்லையாம்.. ஆனால் மைக் கழட்டி எழுந்து சென்ற வரைக்கும் பதிவு செய்யப்பட்டு 1/2 pic.twitter.com/wXahRqWNJE
— Mohan G (@mohandreamer) March 6, 2020