பாகிஸ்தான் வீரர்களோடு இந்திய வீரர்கள் சேர்ந்து விளையாடுவார்களா ? – ஆசிய லெவன் அணியில் புதிய குழப்பம் !

e460050684bda1ca1af76a2454342a49-1

வங்கதேசத்தில் நடக்கும் ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்ககு இடையேயான போட்டியில் இந்திய வீரர்கள் கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வங்காளதேசத்தின் தேசத்தந்தை என புகழப்படும் முஜிபூர் ரஹ்மான் நினைவை ஒட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் டாக்காவில் இரு டி 20 போட்டிகள் நடக்க இருக்கின்றன. இதில் உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் அணிகள் இரு பிரிவுகளாக வீரர்கள் விளையாட உள்ளனர்.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க இந்தியாவின் சார்பில் 5 வீரர்களை அனுப்ப பிசிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் ஆசியா லெவன் அணியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களோடு சேர்ந்து விளையாட வேண்டிய சூழல் இருப்பதால் இப்போது இந்திய வீரர்கள் ஆசிரியர் அணியில் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாலக்கோடு தாக்குதலுக்குப் பிறகு இருநாட்டு அரசியல் உறவும் சுமூகமாக இல்லை. இதுபோலவே இரு நாடுகளும் தனியாக எந்த தொடரிலும் விளையாடுவது இல்லை. ஆனால் உலகக்கோப்பை போன்ற பொது தொடர்களில் மோதி வருகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜ்ஆசிய லெவன் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் விளையாடுவதற்கு சாத்தியங்கள் இல்லை. பிசிசிஐ தலைவர் கங்குலி வங்கதேச வாரியத்திடம் இதுகுறித்து ஆலோசனை செய்ய உள்ளார்.’ எனத் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story