">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இ-பாஸ் ரத்து ? – முதல்வர் இன்று ஆலோசனை!
கொரோனா ஊரடங்கினாள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் மாநிலங்களுள்ளேயே வெவ்வேறு இடங்களில் செல்வதற்கு கூட தடை விதிக்கப்பட்டது. ஆனால், திருமணம் , இறப்பு, மருத்துவம் தொடர்பான சில முக்கிய காரணிகளுக்கு மட்டும் அனுமதித்து இ – பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதையடுத்து பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் இ – பாஸ் வழங்கப்படும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் மத்திய அரசு அந்தந்த மாநிலங்களுக்குள்ளே மக்கள் பயணிக்க மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று நிபந்தனை வித்துள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து மாநில அரசுகள் இ-பாஸ் முறையை ரத்து செய்து வருகிறது. நேற்று புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி இ – பாஸ் முறை ரத்து செய்ததை தொடர்ந்து இன்று தமிழ முதல்வர் எடப்பாடி பழனிசாமி இ-பாஸ் நடைமுறையை தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வரின் ஆய்வுக்குப் பிறகு இ-பாஸ் குறித்து புதிய தகவலை வெளியிட வாய்ப்பு உள்ளது.