">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
திருந்தவே மாட்டிங்களா! சென்னையின் முக்கிய பாலத்தில் வாகன ஓட்டிகள் : 144 என்னாச்சு?
கொரோனா பாதிப்பு தொடர்பாக நாடெங்கும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அரசு வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம், அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் வெளியே வரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, நாடெங்கும் வாகனங்கள் செல்லும் சாலைகள் வெறிச்சோடி கிடக்கிறது. உத்தரவை மீறி வெளியே வரும் நபர்களை போலீசார் செமையாக கவனித்தும், வழக்குப்பதிவு செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை பாடி பாலத்தில் ஏராளமான வாகன ஓட்டிகள் இன்று காலை இருசக்கர வாகனம் மற்றும் காரில் செல்லும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து ‘காவல்துறை என்ன செய்கிறது?’ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு திரும்ப திரும்ப வலிறுத்தியும் இப்படி அடங்காமல் வெளியே சுற்ற மக்கள் கிளம்பி விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Padi bridge now. @chennaicorp @chennaipolice_ pls look into this.. pic.twitter.com/b1J0swJCoX
— Stalin SP (@Stalin__SP) April 1, 2020