More

அஜித் காம்போ வொர்க் அவுட் ஆக இதுதான் காரணம்… மேஜிக் பகிரும் யுவன்

இசைஞானி இளையராஜாவின் மகனாக ஒரு வாரிசாக திரையுலகில் அறிமுகமானாலும் தனது திறமையால் கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளர் அந்தஸ்துக்கு உயர்ந்தவர் யுவன் சங்கர் ராஜா. 1997-ல் அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன், கோலிவுட்டில் 25வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 

Advertising
Advertising

இந்தநிலையில், அஜித்துடன் பணிபுரிவது பற்றி யுவன் பேசியிருக்கிறார். `அஜித் சார் படங்களின் இசையமைப்பாளராக எனக்கு முன்னுரிமை கொடுப்பது பெருமைக்குரிய விஷயம். எங்கள் காம்போ சிறப்பான வெற்றியைப் பதிவு செய்வது சந்தோஷமான விஷயம். அஜித் சார் படங்களுக்கு இசையமைக்கும்போது, படத்தில் போலீஸோ இல்லை டானோ அவர் கேரக்டர் என்ன என்பதை மட்டுமே மனதில் வைத்திருப்பேன். 

அவரது படங்களுக்கு எப்போவுமே ஸ்பெஷலாக எஃபர்ட் போடுவேன். அதுதான் எங்கள் காம்போ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அஜித் சார் மிகவும் எளிமையான மனிதர்’’ என்று பேசியிருக்கிறார். 

Published by
adminram

Recent Posts