வேட்டையன் படத்துல அவங்க என்ன தான் பண்றாங்க? கேட்டாரே ஒரு கேள்வி...!

ஜெய்பீம் பட புகழ் இயக்குனர் த.செ.ஞானவேல் வேட்டையன் படத்தை இயக்குவதால் படத்திற்கான எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. அதே நேரம் படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. தென்மாவட்டங்களில் நடக்கும் கதைகளம் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன், பகத்பாசில்,மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், பகத்பாசில், ரித்திகாசிங் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்காக இசை அமைத்துள்ளவர் அனிருத். முதல் சிங்கிளாக வெளியிடப்பட்டுள்ள மனசிலாயோ பாடலுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

ரஜினியின் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கும் படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரிக்கும் சூப்பர்ஹிட் படம் இது. அக்டோபர் 10ல் திரைக்கு வர உள்ள நிலையில் இன்னும் இந்தப் படத்திற்கான புரொமோஷன் பணிகளில் விறுவிறுப்பு இல்லை. என்ன தான் செய்கிறார்கள் படத்தின் பிஆர்ஓ. யார் இந்தப் படத்திற்கு பிஆர்ஓ.வாக இருக்கிறார்?


வெளிமாநிலங்களில் பிஆர்ஓ அவங்க வேலையை ஒழுங்கா தான் செய்கிறார்களா? ஏன்னா வெளிமாநிலங்களில் வேட்டையன் படத்தோட எந்த அப்டேட்டும் இல்லை. தமிழ்லயும் அந்தப் படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவங்க என்ன தான் பண்றாங்க என வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொல்லும் பதில் இதுதான்.

ஒரு திரைப்படத்தின் செய்தியை உலகம் முழுவதும் கொண்டு போய்ச் சேர்ப்பது தான் அந்தப் படத்தின் பத்திரிகை தொடர்பாளரோட (பிஆர்ஓ) வேலை. ஆனா அந்த முடிவை அவர் மட்டும் எடுத்துவிட முடியாது. அதுக்கு அந்தப் படத்தோட தயாரிப்பாளரும் உதவிகரமா இருக்கணும்.

அவர் இந்தக் காலகட்டத்துல இந்தப் படத்தோட செய்திகளைக் கொண்டு போய்ச் சேருங்கன்னு சொல்லணும். அதுக்குப் பின்னால தான் அவர் அந்த செய்திகளை எல்லாம் வெளியிட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வேட்டையன் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருப்பதால் படத்திற்கு விளம்பரமே தேவையில்லை. இருந்தாலும் ரசிகர்கள் நெட்டிசன்களாகவும் உள்ளதால் தங்கள் தலைவரைப் பற்றி எந்த நியூஸ்சும் வரவில்லையே என ஆதங்கப்படுகின்றனர். அதுவும் சரிதானே.

Related Articles
Next Story
Share it