Categories: Cinema News latest news

அடுத்தடுத்த பெரிய படங்கள்.. ஒரே மாசத்தில் 80 கோடி சம்பளம்.! மச்சக்கார மக்கள் செல்வன்.!

தமிழ் சினிமாவில் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் பல படங்களில் நடித்து கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இதனால் தான் என்னவோ அவருக்கு வரும் பல படங்கள் அனைத்தும் வில்லன் கதாபாத்திரத்திற்கு வாய்ப்பு குவிய தொடங்கியுள்ளது. அதன்படி, இவருக்கு தற்பொழுது பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

 

தற்போது, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் பிளாக் பஸ்டர் படமான ‘புஷ்பா’ படத்தில் இவர்  ஒப்பந்தம் செய்யப்பட்டு நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அதுவும், இந்த படத்தில் இ இவர் நடிப்பதற்கு ரூ. 25 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

மேலும், அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில், இவருக்கு ரூ.35 கோடி சம்பளம் வழங்கப்பட்டு நடித்து வருவதாக செய்திகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்களேன்  – அந்த படம் நடித்திருந்தால் அஜித் வேற லெவல்… பாவம் அந்த இயக்குனர் இறந்து போய்விட்டார்…

அதுபோக, இப்பொது தெலுங்கு முன்னணி ஹீரோவான பாலகிருஷ்ணா நடிப்பில் ஒரு வகை வரும் புதிய பாடத்திலும் அவர் தற்போது வில்லனாக நடிக்க உள்ளதாக ஒரு புதிய செய்தி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது இந்த படத்திற்கு இவரது சம்பளம் ரூ.25 கோடி என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ஒரே மாதத்தில் மட்டும் இவருக்கு மொத்தம் மூன்று பெரிய படங்களில் கமிட்டாகி ரூ. 80 கோடி சம்பளம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது .

Manikandan
Published by
Manikandan