×

சிட்னி போட்டியில் ஆரி ரசிகர்கள் செய்த வேலை... ஏன் பாஸ் இப்படிலாம் செய்றீங்க

சிட்னியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் தொடரில் ஆரி ரசிகர்கள் செய்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

சிட்னியில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதிக் கொள்கிறது. இன்று ஐந்தாவது நாள் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கண்டிப்பாக வெற்றி பெற்று விடலாம் என நினைத்திருந்த ஆஸ்திரேலியாவிற்கு இந்தியாவின் ஆட்டம் விஸ்வரூபமாகி இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா 6000 ரன்களைக் கடந்திருக்கிறார்.

இப்படி ஒரு புறம் ஆட்டம் பரபரக்க, பிக்பாஸ் ரசிகர்கள் அங்கும் ஒரு களேபரத்தை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். பிக் பாஸ் தமிழின் வின்னராக கருதப்படும் ஆரிக்கு ஆஸ்திரேலியா வரை ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆரி தான் டைட்டில் வின்னர், கடவுள் இருக்கான் குமாரு என எழுதிய கார்டுகளிடன் கொடுத்த போஸ் வைரலாக பரவி வருகிறது. 

பிக் பாஸ் தமிழின் இறுதி வாரம் நடைப்பெற்று கொண்டிருப்பதும், ஒவ்வொருவரின் ரசிகர்களும் மாறி மாறி வாக்குகளை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News