போன வாரம் ரோமியோ.. இந்த வாரம் ரத்னம்!.. வரிசையாக போட்டு தள்ளும் கில்லி!.. ஐயோ பாவம்!..

எல்லா திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் தயாரிக்கப்படுகிறது. ஆனால், எல்லா படங்களும் வெற்றி பெறுவதும் இல்லை. சினிமா என்பது ரசிகர்களுக்குதான் பொழுதுபோக்கு. தயாரிப்பாளர்களுக்கு சினிமா ஒரு தொழில். இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் ஒரு படம் என்பது அவர்களின் கேரியரை தீர்மானிக்கும் விஷயம்.

ஏனெனில் ஒரு படம் ஓடி நல்ல வசூலை பெற்றால் அந்த ஹீரோவின் சம்பளம் சில கோடிகள் அதிகரித்துவிடும். அந்த படத்தை இயக்கிய இயக்குனருக்கும் அடுத்து படங்கள் கிடைக்கும். பல ஹீரோக்கள் அந்த இயக்குனரை தொடர்பு கொண்டு ‘உங்கள் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என சொல்வார்கள்.

இதையும் படிங்க: ரெண்டு படத்துல வாய்ப்பு போச்சி!.. வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கலாம் விஜய் சேதுபதி!…

அதுவே அப்படம் தோல்வி என்றால் எல்லாம் உல்ட்டாவாக மாறிவிடும். அதனால்தான் ஒரு படத்தை வெற்றி பெறவைக்க பல யுக்திகளை திரையுலகினர் கையாள்வார்கள். சில சமயம் ஒரு நடிகரின் படமே மற்ற நடிகரின் படத்திற்கு எமனாக வந்துவிடும். தமிழ் சினிமாவில் பரபர ஆக்சன் படங்களை இயக்கி வருபவர் ஹரி. விக்ரமை வைத்து சாமி, சூர்யாவை வைத்து சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 என அடித்து ஆடியவர்.

ஏற்கனவே விஷாலை தாமிரபரணி, பூஜை என இரண்டு படங்களை அவர் இயக்கிய நிலையில், மீண்டும் அவரை வைத்து இயக்கிய படம்தான் ‘ரத்னம்’. ஹரியின் வழக்கமான மசாலா, செண்டிமெண்ட், ஆக்‌ஷன் காட்சிகள் இதிலும் உண்டு. ஆனால், இந்த படத்தின் விஜய்யின் ‘கில்லி’ படம் எமனாக வந்திருக்கிறது.

இதையும் படிங்க: சார் உங்களுக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய்!.. விஜய்க்கே விபூதி அடித்த தயாரிப்பாளர்!.. அட அந்த படமா?!..

சிலநாட்களுக்கு முன்பு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் இன்னமும் நல்ல வசூலை பெற்று வருகிறது. அதனால், ரத்னம் படத்திற்கு வசூல் பெரிதாக இல்லை. ரத்னம் படத்திற்கு சின்ன சின்ன தியேட்டர்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது. போன வாரம் விஜய் ஆண்டனியின் ரோமியோ படமும் வெளியானது. ஆனால், அந்த படத்திற்கும் கூட்டம் இல்லை. அந்த படத்திற்கும் விஜயின் கில்லி படம்தான் எமனாக வந்தது.

மொத்தத்தில் 20 வருடங்களுக்கு முன்பு வெளியாகி இப்போது ரீரிலீஸ் செய்யப்பட்ட விஜயின் கில்லி படம் விஜய் ஆண்டனியின் ரோமியோ மற்றும் விஷாலின் ரத்னம் ஆகிய இரண்டு படங்களின் வசூலையும் காலி செய்துவிட்டது. இதனால், விஜய் ஆண்டனியும், விஷாலும் செம அப்செட்டில் இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.

 

Related Articles

Next Story