">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஜெட் ஸ்பீடில் படக்குழு…. வலிமை டப்பிங்கை முடித்த தல அஜித்…அப்ப ஷூட்டிங் ஓவரா?…
ஜெட் ஸ்பீடில் படக்குழு…. வலிமை டப்பிங்கை முடித்த தல அஜித்…அப்ப ஷூட்டிங் ஓவரா?…
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் இரண்டாவது படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்தின் ஜோடிக்கூட இதுவரை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதை தொடர்ந்து, சில புகைப்படங்கள் லீக்காகி ரசிகர்களை குஷியாக்கியது. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என லோனிகபூர் டிவிட் செய்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்திற்கான தனது டப்பிங் பணியை அஜித் முடித்து கொடுத்துவிட்டார். தற்போது மற்ற நடிகர்கள் டப்பிங் பேசும் பணிகள் நடைபெற்று வருகிறது. டப்பிங் பணி நடைபெறுகிறது எனில் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக கணிக்கப்படுகிறது. எனவே, அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என கருதப்படுகிறது.