Categories: Cinema News latest news throwback stories

இந்த நடிகரை போல இருக்க வேண்டும் என ஆசைப்பட்ட சிவாஜி – யாருனு தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு நடிப்புச் சக்கரவர்த்தியாக வாழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என கூறலாம். பராசக்தியில் தன் நடிப்பை தொடங்கிய சிவாஜி அதன்பின் தொடர்ச்சியான பல படங்களில் தன் நடிப்பு திறமையை காட்டி மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.

sivaji1

சரித்திர படங்கள், புராணங்கள், வரலாற்று கதைகள், குடும்பப் பாங்கான கதைகள் என அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடித்து அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டினார்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு வரும் ஒவ்வொரு கலைஞர்களும் சிவாஜியின் படங்களை பார்த்தால் தெரியும் . எந்த மாதிரி நடிக்க வேண்டும்? எந்த மாதிரி உணர்வு பூர்வமாக நடிப்பை வெளிப்படுத்த வேண்டும்? என அவர் நடித்த படங்களிலேயே வளரும் இளம் தளம் முறையினர் கற்றுக் கொள்ளலாம்.

sivaji3

இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகரான ஏ ஆர் ஸ்ரீனிவாசன் சிவாஜியுடனான தனது அனுபவங்களை ஒரு பேட்டியில் மூலம் பகிர்ந்து இருக்கிறார். அதாவது சிவாஜி நடித்த ஜல்லிக்கட்டு படத்தில் ஏ ஆர் ஸ்ரீனிவாசனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தாராம். அப்போது இடைவேளை நேரத்தில் ஸ்ரீனிவாசன் எழுந்து போகும்போது சிவாஜி “எங்கே போகிறாய் வந்து உட்காரு” என்று சொன்னாராம்.

இவரும் வந்து உட்கார ஸ்ரீனிவாசனை சிவாஜி உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாராம். அதற்கு ஸ்ரீனிவாசன் ஏன் என்னை பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள் என கேட்க சிவாஜி அவரிடம் “உன்னை மாதிரி உயரமும் நிறமும் இருந்திருந்தால் நான் இந்த உலகத்தையே வித்திருப்பேன்” என கூறினாராம். அதற்கு ஸ்ரீனிவாசன் ஏன் இப்ப கூட அப்படித்தானே இருக்கிறீர்கள் என கேட்டாராம்.

ar srinivasan

மேலும் சிவாஜியின் இந்த எண்ணத்தை மாற்றுவதற்கு அவரிடம் ஸ்ரீனிவாசன் சொன்ன பதில் தான் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதாவது இந்த மாதிரி உயரமும் கலரும் இருந்திருந்தால் ஐஜி கதாபாத்திரம், குணசித்திர அப்பா கதாபாத்திரம், சில்க் ஜிப்பா போட்ட பாத்திரம் இப்படி இந்த மாதிரி பாத்திரங்களுக்கு மட்டும்தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறி மேலும் என்னை தில்லானா மோகனாம்பாள் படத்தில் தாங்கள் நடித்த கதாபாத்திரத்திற்கு மாற்றி கற்பனை செய்து பாருங்கள். மோகனாம்பாள் என்னை காதலிக்க மாட்டேன் என்று சொல்லி ஓடி விடுவாள் என்று கூறினாராம். இதை கேட்டதும் சிவாஜி விழுந்து விழுந்து சிரித்தாராம்.

இதையும் படிங்க : அம்மா அப்பா எனக்கு பண்ணாததை கூட அவங்க செஞ்சிருக்காங்க… செண்டிமெண்டாக பேசிய தனுஷ் பட இயக்குனர்!..

Published by
Rohini