
Cinema News
நடிகையை சோதித்து பார்க்க சந்திரபாபு செய்த வேண்டாத வேலை.. நடந்த ட்விஸ்ட்தான் வேற
Published on
By
Actor Chandrababu: தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகர் சந்திரபாபு. தனது நகைச்சுவையான நடனம் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்த சந்திரபாபு அவரே பாட்டு பாட்டி நடிக்கவும் செய்வார். அவர் நடித்த படங்களில் அவரே பாடி நடித்திருக்கிறார். பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே பாடல் சந்திரபாபு பாடிய பாடல்களில் மிகவும் பிரபலமான பாடலாகும்.
எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களுடன் பல படங்களில் நடித்த சந்திரபாபு மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. நடிகைகளிடம் சகஜமாக பழகக் கூடியவர். அந்த வகையில் நடிகை சச்சுவுடன் ஒரு சகோதர மனப்பான்மையுடன் பழகி வந்தார்.
இதையும் படிங்க: கேட் ஏறி குதித்த கேப்டன் விஜயகாந்த்!.. அவர் சொன்ன காரணத்தை கேட்டு நெகிழ்ந்து போன இயக்குனர்..
பழம்பெரும் இயக்குனரான கே.வி. சுப்பிரமணியம் ஒரு நடிப்பு பயிற்சி பள்ளியை நடத்தி வந்தார். அதில் சந்திரபாபுவும் சச்சுவும் ஒன்றாக படித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில்தான் பாண்டித்தேவன் என்ற பெயரில் சுப்பிரமணியன் ஒரு படத்தை எடுத்தாராம். அதில் சந்திரபாபுவும் சச்சுவும் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அதிலிருந்து சச்சு வீட்டில் உள்ளவர்களுடன் நெருக்கமாக பழக கூடிய வாய்ப்பு சந்திரபாபுவுக்கு கிடைத்திருக்கிறது.
ஒரு சகோதரி போல நினைத்து பழகினாராம் சந்திரபாபு. திடீரென ஒரு நண்பர் சச்சு வீட்டிற்கு வந்து ‘ நேற்று நானும் சந்திரபாபுவும் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தோம். அப்போது சந்திரபாபுவுக்கு மாரடைப்பு வந்து இறந்துவிட்டார். நீங்கள் அவருக்கு சகோதரி போல என்று தெரிந்தும் உங்களிடம் சொல்ல வந்தேன்’ என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:தக் லைப் படத்தில் காலியான 2வது விக்கெட்!… அவருக்கு பதிலா நடிக்கபோவது அந்த நடிகராம்!..
இதைக் கேட்டதும் சச்சு சந்திரபாபுவை பார்க்க அவரது வீட்டிற்கு செல்ல அங்கு அவருக்கு காத்திருந்தது பெரிய அதிர்ச்சி. ஏனெனில் சந்திரபாபு நாற்காலியிம் அமர்ந்திருந்தாராம். அதன் பிறகுதான் தெரிந்திருக்கிறது சச்சுவை சோதனை செய்யவே சந்திரபாபு இவ்வாறு செய்தார் என்று. ஏன் இப்படி செய்தீர்கள் என சச்சு கேட்க ‘ நான் போய்விட்டால் எப்படி அழுவாய் என்று சோதிக்கவே இவ்வாறு செய்தேன்’ என கூறியிருக்கிறார் சந்திரபாபு. ஆனாலும் அதிலிருந்து தொடர்ந்து 2 மணி நேரம் சச்சு அழுது கொண்டுதான் இருந்தாராம்.
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அந்த படத்திற்கு முன் அஜித் நடிப்பில்...