×

அண்ணாத்த படத்தில் அசத்தலான வில்லன் நடிகர்... ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்தான்..!

 
அண்ணாத்த படத்தில் அசத்தலான வில்லன் நடிகர்... ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்தான்..!

இயக்குனர் `சிறுத்தை’ சிவாவுடன் முதல்முறையாக குடும்பப் படம் ஒன்றுக்காக ரஜினி கைகோர்த்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த ஹை-பட்ஜெட் படத்தில் நயன்தாரா,  மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடிக்கிறார்கள். 

ஹைதராபாத்தில் கடந்த டிசம்பரில் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும், உயர் ரத்த அழுத்தம் காரணமாக ரஜினி, ஹைதராபாத் அப்போலோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, 2 நாள் சிகிச்சை எடுத்தார். பின்னர், படக்குழுவினர் படப்பிடிப்பை நிறுத்தி சென்னை திரும்பினர்.தற்போது 2 மாதம் ஆகிவிட்ட நிலையில் சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

jagapathi

இந்நிலையில், இப்படத்தில் பிரபல தெலுங்கு பட வில்லன் நடிகர் ஜகபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே விஸ்வாசம், பைரவா, லிங்கா ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

From around the web

Trending Videos

Tamilnadu News