Categories: Cinema News latest news

வாடிவாசலில் இவர்தான் நடிக்கிறாரா? வைரலாகும் புகைப்படம்.. சூர்யாவையே மிஞ்சிட்டாரே

Vadivasal: வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு பொக்கிஷமாகவே பார்க்கப்படுவது வாடிவாசல் திரைப்படம். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியது. ஏனெனில் அசுரன் பட வெற்றி அடுத்து வெற்றிமாறன் வாடிவாசலை தான் எடுக்க இருக்கிறார் என்று சொன்னதும் அதே வெற்றிக்களிப்புடன் ரசிகர்கள் இருந்தார்கள்.

அதனால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் சூர்யா திடீரென கங்குவா படத்தில் ஒப்பந்தம் ஆனது. அதே போல் வெற்றிமாறனும் அவருடைய கனவு ப்ராஜக்ட்டான விடுதலை படத்தில் ஒப்பந்தம் ஆனது என இருவரும் பிஸியானார்கள். அதனால் வாடிவாசல் படம் ஆரம்பிக்கப்படாமலேயே இருந்தது. ஆனால் சூர்யா வாடிவாசல் திரைப்படத்திற்காக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டார்.

இதையும் படிங்க: அவர் இல்லைனா இது நடந்திருக்காது! நீண்ட நாளுக்கு பிறகு கணவரை பற்றி வாய்திறந்த ஐஸ்வர்யா

அதோடு புதியதாக ஒரு காளையை வாங்கி அதனுடன் பயிற்சியும் எடுத்து வந்தார். ஆனால் படம்தான் ஆரம்பிக்காமல் போனது. அதன் பிறகு இடையில் மீண்டும் வாடிவாசல் படம் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவர சூர்யா குடும்பத்துடன் மும்பையில் செட்டிலானார். அங்கே ஹிந்தியில் ஒரு சில ப்ராஜக்ட்டில் சூர்யா கமிட் ஆக இனிமேல் வாடிவாசல் அவ்வளவுதான் என்று கூறினார்கள்.

john

இதனால் சூர்யாவுக்கு பதில் சூரி நடிக்க வாய்ப்புள்ளது என்ற செய்தியெல்லாம் வெளியானது. ஆனால் வாடிவாசல் கண்டிப்பாக சூர்யாவுக்குத்தான் என கோடம்பாக்கத்தில் இருக்கும் ஒரு சில முக்கிய புள்ளிகள் ஆணித்தரமாக கூறி வருகிறார்கள். இந்த நிலையில் துணிவு படத்தில் வில்லனாக நடித்த ஜான் கொக்கைன் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: ராதிகாவிடம் அடி இடியா விழுதே கோபி உங்களுக்கு!… திருந்துங்க திருந்துங்க…

அதில் ஜான் கொக்கைன் காளையுடன் வீரத்தமிழன் மதுரை வீரனாக மிகவும் கம்பீரமாக போஸ் கொடுக்கும் மாதிரியான புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். ஒரு சாயலில் சூர்யா மாதிரியே அச்சு அசல் சாயலில் இருக்கிறார் ஜான் கொக்கைன்.

மேலும் இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் எதற்கு சூர்யா, சூரினு காத்துக் கொண்டிருக்கிறீர்கள் வெற்றிமாறன்? பேசாமல் இவரையே வைத்து வாடிவாசலை தொடங்குங்கள் என அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

john

இதையும் படிங்க: அந்த பாட்டு எனக்கு கிடக்கலயேன்னு ரொம்ப ஃபீல் பண்ணேன்!.. எஸ்.பி.பி கொடுத்த பேட்டி…

 

Published by
Rohini