laila
Laila: 2கே கிட்ஸ்களின் கனவு கன்னியாக ஒரு காலத்தில் இருந்தவர் நடிகை லைலா. எப்பொழுதும் புன்னகை முகத்துடனும் துரு துருவென்றும் தன்னையும் தன்னை சுற்றி இருப்பவர்களையும் எப்பொழுதுமே சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும் நடிகை லைலா.
சூர்யா அஜித் சரத்குமார் விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாகவே அமைந்திருக்கின்றன. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த லைலா ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு சர்தார் படத்தின் மூலம் ரீ எண்டிரி ஆனார்.
இதையும் படிங்க: கமல் சிம்பிளா முடிச்சாரு.. ஆனால் ரஜினிகாந்த் போட்ட சீன் இருக்கே… பிரபல நடிகரையே மிரட்டிய சம்பவம்
ஆனால் அதற்கு முன்பாகவே வதந்தி என்ற வெப் சீரிஸில் தான் முதன் முதலில் திருமணத்திற்கு பிறகு ஒரு கம்பேக் கொடுத்தார். ஆனால் வதந்தி சீரிஸுக்கு முன்னாடியே சர்தார் திரைப்படம் வந்ததால் அந்த படம் தான் அவருக்கு ஒரு ரீ என்ட்ரி திரைப்படமாக அமைந்தது.
அந்த படத்தில் கார்த்தி உடன் நடித்த அனுபவங்கள் பற்றியும் அவருக்கும் தனக்கும் இடையே நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தை பற்றியும் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் லைலா. அதாவது நடிகர் சங்க தேர்தலின் போது லைலாவின் வீட்டிற்கு கார்த்தி ஓட்டு போடுவதற்கு என ஒரு சீட்டை அனுப்பினாராம்.
இதையும் படிங்க: காந்தி – விநாயக் ஒன்னா வந்தா எப்படி இருக்கும்? வைரலாகும் விஜய் அஜித் புகைப்படம்
ஆனால் அது லைலாவின் அம்மா அப்பா இருக்கும் வீட்டிற்கு சென்று இருக்கிறது. அந்த சீட்டில் முழுவதுமே தமிழில் எழுதப்பட்டிருந்ததாம். அதை பிரித்து படித்துப் பார்த்த லைலாவின் அப்பாவிற்கு ஒன்றுமே புரியவில்லையாம். ஏனெனில் அவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாதாம்.
உடனே லைலாவின் அப்பா அதை கசக்கி பிழிந்து குப்பையில் தூக்கி வீசி விட்டாராம். அதன் பிறகு கார்த்தி லைலாவுக்கு போன் செய்து இந்த மாதிரி ஒரு ஓட்டு சீட்டு அனுப்பி இருக்கிறேன். அதில் டிக் அடித்து திரும்பவும் எங்களுக்கு அனுப்பவும் என சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: கோட்ட மாட்டிட்டாப்ல! சும்மா மாஸா இருக்காப்ல.. வெளியான பிக்பாஸ் 8 ப்ரோமோ
உடனே லைலா அவருடைய அப்பாவுக்கு போன் செய்து இந்த மாதிரி தனக்கு ஏதும் போஸ்ட் வந்ததா என கேட்டிருக்கிறார். அதன் பிறகு தான் நடந்த விவரத்தை லைலாவின் அப்பா சொல்ல அதை கார்த்தியிடம் லைலா சொல்லி இருக்கிறார்.
உடனே கார்த்தி வழக்கம் போல அவருடைய பாணியில் கிண்டல் அடிக்க குப்பையில் இருந்து அந்த சீட்டை லைலாவின் அப்பா தேடிப்பிடித்து அதிலேயே சரியான தேர்வை டிக் அடித்து அனுப்பினாராம் லைலா.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…