Categories: Cinema News latest news

ஒரு தடவ சொன்னா புரியாது! விஜய் பற்றி கேட்டதற்கு டென்ஷனான பிரசாந்த்.. என்ன இருந்தாலும் டாப் ஸ்டாருல

Actor Prasanth: தமிழ் சினிமாவில் விஜய் அஜித் ஒரு நடிகர் என்ற அந்தஸ்தை பெறுவதற்கு முன்பே டாப் நடிகராக இருந்தவர் பிரசாந்த். தளபதி என விஜய்யையும் தல என அஜித்தையும் அழைக்கும் ரசிகர்கள் பிரசாந்தை டாப் ஸ்டார் என்று தான் அழைத்து வந்தார்கள். தமிழ் நாடு மட்டுமல்ல உலகளாவிய அளவில் அவருக்கு ரசிகர்கள் இருந்து வந்தார்கள்.

குறிப்பாக சிங்கப்பூர் மலேசியாவில் பிரசாந்துக்கு என இன்று வரை ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அவர் நடித்த வந்த நேரத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாகவே திகழ்ந்து வந்தார். நடித்த பல படங்கள் வெற்றி விழா கண்டது. லவ்வர் பாயாக சார்மிங் ஹீரோவாக அழகான கதாநாயகனாக இந்த திரையுலகில் வலம் வந்தார் பிரசாந்த்.

இதையும் படிங்க:அந்த நடிகரின் விவாகரத்துக்கு காரணமும் அவர்தானா?!.. என்னப்பா சொல்றீங்க?!..

ஆனால் விதி யாரை விட்டது. அவருடைய சினிமா கெரியரில் ஒரு பெரிய பிரேக் ஏற்பட்டது. சிறிது நாட்கள் படத்தில் நடிக்காமலேயே இருந்தார். ஆனால் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இன்னொரு பக்கம் விஜய் அஜித் உச்சம் பெற இழந்த இடத்தை பெற முடியாமல் தவித்து வந்தார் பிரசாந்த். தற்போது விஜயுடன் கோட் படத்தில் நடித்து வருகிறார் பிரசாந்த்.

ஏற்கனவே கோட் படத்தை பற்றி பிரசாந்திடம் நிருபர் ஒருவர்  ‘விஜய் படத்தில் நடிக்கிறீர்களே’ என கேட்டதற்கு  ‘விஜய் படத்தில் அல்ல விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறேன்’ என தெளிவுபடுத்தினார். அதேபோல் நேற்று ஒரு விழாவில் கலந்து கொண்ட போது அதே கேள்வியை ஒரு நிருபர் கேட்டார்.

இதையும் படிங்க: ஒரு படத்துல நடிச்சதே போதும்! விஜய் தொடர்ந்து வில்லனா நடிக்காததற்கு இவங்கதான் காரணமா?

‘விஜய் படத்தில் நடித்துள்ளீர்களே? அதைப்பற்றி’ என இழுத்தார். உடனே பிரசாந்த்  ‘விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறேன்’ என அதை திருத்தி பதில் சொன்னார். சரி நடித்துள்ளீர்களே கோட்படத்தை பற்றி ஏதாவது சொல்லுங்கள் என கேட்டதற்கு அதற்கு என நேரம் வரும். அப்போது பேசிக் கொள்ளலாம் என கையெடுத்து கும்பிட்டு கிளம்பிவிட்டார் பிரசாந்த்.

என்ன இருந்தாலும் ஒரு காலத்தில் முன்னனி  ஹீரோவாக தனது  மார்கெட்டை தக்க வைத்தவர் பிரசாந்த். அதுமட்டுமில்லாமல் பல முறை இப்படி திருத்தி சொல்வதால் கோட் படத்தில் ஒரு வெயிட்டான கேரக்டரில்தான் நடிப்பார் என்றே தெரிகிறது.

இதையும் படிங்க: சீக்கிரமே திருமணம் செய்துக் கொள்ளப் போகும் ரஜினி, கமலின் ரீல் மகள்.. வருத்தத்தில் இளைஞர்கள்!..

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini