Categories: Cinema News latest news

இதனாலதான் விஜயகாந்த் இப்படி ஆயிட்டான்!.. கேப்டனின் உடல்நிலை மீது ஆதங்கப்பட்ட ராதாரவி..

Vijayakanth: மருத்துவ சிகிச்சைக்கு பிறகு நேற்று முதன் முறையாக விஜயகாந்தை பொதுக்கூட்டத்தில் பார்த்து மக்கள் கலங்கிப் போனார்கள். கேப்டன் தள்ளாடி சறுக்கி விழுந்ததை பார்த்து வந்திருந்த ரசிகர்கள் கண்கலங்கிப் போனார்கள்.

இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் சாந்தனுவும் இனிமே விஜயகாந்தை இப்படி பொதுவெளியில் அழைத்துக் கொண்டு வராதீர்கள். பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது என தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த நிலையில் விஜயகாந்தின் நண்பரும் நடிகருமான ராதாரவி சமீபத்தில் விஜயகாந்தை பற்றி கூறியிருந்தார்.

இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் சிகரெட் கேட்டு கெஞ்சிய வடிவேலு.. அப்படி வளர்ந்தவர்தான் இப்போ இப்படி!…

விஜயகாந்தை இப்படி பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எந்த பிரச்சினையானாலும் முதல் ஆளாக துணிந்து இறங்க கூடியவர். நாங்கள் மொத்தம் 5 பேர் நண்பர்கள் என விஜயகாந்த், எஸ்.எஸ்.சந்திரன், வாகை சந்திரசேகர், தியாகு போன்றவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு எங்க கேங்கில் விஜி தான் ஹீரோ என கூறினார்.

மேலும் சாப்பாடு விஷயத்தில் வாரி வாரி கொடுப்பவர். அதுமட்டுமில்லாமல் ராவுத்தர் இருக்கிற வரைக்கும் விஜயகாந்தின் எல்லா விஷயத்தையும் ராவுத்தர்தான் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென எங்க குரூப் விஜயகாந்திடமிருந்து பிரிந்து விட்டோம். அது ஏன் என இதுவரைக்கும் எனக்கே தெரியவில்லை என்று கூறினார்.

இதையும் படிங்க: அஜித் ஒரு மாதிரியான கேரக்டர்! இவ்ளோ நாள் எங்கப்பா இருந்தீங்க? பிரபலம் கொடுத்த ஷாக்

அப்படி இருந்த எங்களை இப்பொழுது விஜயகாந்தை பார்க்கவே விடல. இதை ஒரு  மேடையில் அவருடைய மைத்துனர் சுதீஷ் இருக்கும் போதே சொன்னதற்கு கேப்டனை பார்க்க வேண்டுமென்றால் திருமண மண்டபத்திற்கு வந்து பாருங்கள் என்று  கூறினாராம்.

இதற்கு ராதாரவி ‘அது என் வேலை இல்லை’ என்று கூறினார். மேலும் அரசியலில் ரொம்பவும் நேர்மையாக இருக்க கூடாது. விஜி மிகவும் நேர்மையாக இருந்து விட்டார். அப்படி இருந்தால் வேலைக்கு ஆகாது என ராதாரவி கூறினார்.

இதையும் படிங்க: போட்ட காசை எடுப்பாரா லோகேஷ் கனகராஜ்?.. உறியடி விஜய் குமார் நடிப்பு எப்படி? ஃபைட் கிளப் விமர்சனம்!

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini