Categories: Cinema News latest news

நண்பன் கேட்டால் உசுற கூட தருவேன்! இத விட என்ன வேணும்? கமலுக்காக மாஸ் காட்ட போகும் ரஜினி

INDIAN 2: தமிழ் சினிமாவில் இரு பெரும் ஜாம்பவான்களாக திகழ்பவர்கள் ரஜினி மற்றும் கமல்.80களில் இவர்களின் ஆட்டம்தான் கொடி கட்டி பறந்தது. எங்கு திரும்புனாலும் ரஜினி படம், கமல் படம் என மாறி மாறி திரையரங்குகளை அலங்கரித்துக் கொண்டு வந்தார்கள்.

ஒரு கட்டத்தில் கமலையே ஓவர் டேக் செய்து குதிரையோட்டம் ஓடிக் கொண்டிருந்தார் ரஜினி. இருந்தாலும் ரஜினி மீது கமலுக்கு எந்த கோபமோ பொறாமையோ இருந்ததில்லை. தொழில் ரிதியாக வேண்டுமென்றால் போட்டி இருந்திருக்கலாம்.

இதையும் படிங்க: இது அதுல்ல!.. தடவல் மன்னனா நீ!.. நிக்சனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்…

ஆனால் நிஜத்தில் எங்களை போல் நட்பு பாராட்டக் கூடிய நடிகர்கள் எங்களுக்கு  முந்தைய தலைமுறையில் இருந்ததில்லை. அடுத்த தலைமுறை எங்களை பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என ஒரு  மேடையில் கமல் கூறியிருந்தார்.

மேலும் என் நண்பரை வைத்து என் ரசிகன் படம் எடுக்கிறார் என்றால் அது எனக்குத்தான் பெருமை என்றும் ரஜினி 171 படத்திற்காக பேசியிருந்தார். இப்படி ஒருவரையொருவர் பொது மேடைகளில் நட்பு பாராட்டி கொண்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: பிரதீப்பை விட நிக்சன் தான் என்னை தப்பா பேசுனான்… அக்காவ இப்டியா பேசுவாங்க… வினுஷா சொல்லும் ஷாக்..!

இவர்களின் இந்த நட்பு பார்க்கிறவர்களுக்கும் நல்ல ஒரு ஆரோக்கியமாகவே இருக்கும். ஆனால் இப்ப உள்ள தலைமுறையினர் இவர்களை போன்று இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் இவர்களின் நட்பை ஆழமாக காட்டக் கூடிய ஒரு நிகழ்வு நடக்க இருக்கிறது.

நாளை இந்தியன் 2 படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை ரஜினிதான் வெளியிட இருக்கிறாராம், மாலை 5.30 மணியளவில் இந்தியன் 2 படத்திற்கான அந்த அறிவிப்பு வெளியாகும் நிலையில் ரஜினி , கமலின் ஆழமான நட்பு  நமக்கு புலப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் சக்சஸ் மீட்டில் அஜித் பற்றிய கேள்வி!. கடுப்பான பிரபலம்!. கொஞ்சம் சும்மா இருங்கப்பா!..

இந்த தகவலை லைக்கா புரடக்‌ஷன் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டு இவர்களின் உண்மையான நட்பு நாளுக்கு நாள் பலப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என்ற கருத்தையும் சேர்த்து பதிவிட்டிருக்கின்றனர்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini