×

வெளியில் தலைகாட்டாமல் பம்மும் நடிகர்... இதுதான் பிரச்சனை!

சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கும் அந்த நடிகர் வெளியில் எங்கும் தலைகாட்டாமல் வீட்டுக்குள்ளேயே பம்மியிருக்கிறாராம். 
 
வெளியில் தலைகாட்டாமல் பம்மும் நடிகர்... இதுதான் பிரச்சனை!

கோடம்பாக்கத்தின் லவ்வர் பாயாகச் சர்ச்சை எதிலும் சிக்காமல் வலம்வந்த அந்த நடிகர் நடித்த படங்கள் சில ஆண்டுகளாகவே சரியாகப் போகவில்லை. இதனால் அவரை வைத்துப் படமெடுக்கவே தயாரிப்பாளர்கள் யோசிக்கத் தொடங்கினார். 

இருந்தாலும் ஒரு சில தயாரிப்பாளர்களின் மண்டையைக் கழுவி வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களில் நடித்து வந்தார். ஆனால், அது எதுவும் அவருக்குக் கை கொடுக்கவில்லை. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சமீபத்தில் ஒரு விவகாரமான பஞ்சாயத்தில் நடிகரின் பெயர் அடிபட்டது அவருக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், வீட்டுக்குள்ளேயே 24 மணிநேரமும் பம்மியிருக்கும் அந்த நடிகர் எப்போதும் போகும் ஜிம் பக்கம் கூட தலைகாட்ட மாட்டேன்கிறாராம். என்னதான் பிரச்சனை என அவரைத் தொடர்புகொண்டு கேட்டால், அதைப் பற்றி பேசாதீர்கள் என நழுவி விடுகிறார்களாம். 

இத்தனைக்கும் அவர் நடித்த படம் வெளியானபோது அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட தலைகாட்ட அவர் மறுத்துவிட்டார். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஒளிந்துகொண்டு இருக்க முடியும். எப்படியும் வெளியில் வந்து தானே ஆகவேண்டும் என கமெண்டடிக்கிறார்கள் கோடம்பாக்க வட்டாரத்தில். 

From around the web

Trending Videos

Tamilnadu News