தப்பு பண்ணா அடிப்பாரு! படத்துல பார்த்து மூதாட்டி ஒருவர் கேப்டனிடம் கேட்ட விஷயம்

by Rohini |
vijayakanth
X

vijayakanth

விஜயகாந்த்:

இனிமே சினிமாவில் இந்த மாதிரி ஒரு மனிதரை பார்க்க முடியாது என்று எம்ஜிஆருக்கு அடுத்த படியாக அனைவரும் சொல்வது விஜயகாந்தைத்தான். தன்னுடைய நலத்தை விட பிறர் நலன் மீது அதிக அக்கறை கொண்டவராக இருந்தவர் விஜயகாந்த். பொதுவாக ஹீரோவை பொறுத்தவரைக்கும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டோம். அதோடு நம் வேலை முடிந்தது என்றுதான் இருப்பார்கள்.

ஆனால் விஜயகாந்த் அடிமட்டத்தில் இருந்து கடைசி வரை இருக்கும் அனைத்து வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்தி கடை நிலை ஊழியர்கள் வரை அவர்கள் சாப்பிட்டார்களா? இல்லையா என்ற அக்கறையோடு பார்த்துக் கொண்டவர். தயாரிப்பாளரின் நடிகர் என்று விஜயகாந்தை குறிப்பிடலாம். ஏனெனில் தயாரிப்பாளருக்கு எந்தவிதத்திலும் பெரிய அளவில் செலவுகளை இழுத்து வைக்கக் கூடாது என்று எண்ணுபவர்,

தட்டிக்கேட்டால் அடிப்பார்:

அவரும் வெளியில் கடனை வாங்கித்தானே படத்தை எடுக்கிறார். அதற்காக அவர் படும் கஷ்டங்களை தன் கஷ்டமாக பார்ப்பவர் விஜயகாந்த். விஜயகாந்த் படங்களை பொறுத்தவரைக்கும் அவர் முன் எதாவது ஒரு தப்பு நடந்து விட்டால் அதை உடனே தட்டிக் கேட்கும் கேரக்டரில்தான் பெரும்பாலும் நடித்திருப்பார். அரசுக்கு எதிரான அநியாயங்கள் , மக்களுக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகள் என எதுவாக இருந்தாலும் இந்த கேப்டன் தட்டிக் கேட்பான் என்று மக்கள் மனதிலும் பதிந்து போனது.

தப்பு நடந்தால் அடிப்பார் கேப்டன் என்று அனைவரும் நம்ப ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில் ஒரு படப்பிடிப்பில் இருக்கும் போது விஜயகாந்தை சுற்றி மக்கள் கூட்டமாக நின்று அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்களாம். அப்போது ஒரு முதாட்டி பெண் ஒருவர் விஜயகாந்தை பார்க்க ஆர்வமாக வந்திருக்கிறார். விஜயகாந்தை அழைத்து கட்டியணைத்து ரேஷன் கடையில் ஒழுங்காக சாமான் தரமாட்டிக்கிறார்கள்.


அரசியலுக்கு வந்த பிறகு:

நீதான் சாமி தட்டிக் கேட்கனும் என்று சொல்லியிருக்கிறார் அந்த மூதாட்டி. உடனே அங்கிருந்தவர்கள் சிரிக்க பதிலுக்கு விஜயகாந்த் ‘பாட்டி நான் கேட்பதா? அது என்னால இப்போ முடியாது. அரசியலுக்கு வந்த பிறகு தவறு நடக்காம பாத்துக்குறேன்’ என்று சொல்லி அனுப்பி வைத்தாராம் விஜயகாந்த். இந்த தகவலை சமுத்திரக்கனி கூறினார். அந்தப் படத்தில் சமுத்திரக்கனி ஒரு உதவியாளராக பணிபுரிந்தாராம். இந்த சம்பவத்தை அவர் நேரில் பார்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:கம்பீரமான மனுஷன் சிதஞ்சு இருந்தாரு!.. AI மூலமா காட்டாதீங்க.. கண்கலங்கிய விக்ரமன்..!

Next Story