×

குணச்சித்திர நடிகர் செல்லதுரை காலமானர் - ரசிகர்கள் அதிர்ச்சி

 
குணச்சித்திர நடிகர் செல்லதுரை காலமானர் - ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் கத்தி, தெறி, மாரி, நட்பே துணை, அறம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் செல்லதுரை. இவரது புகைப்படங்களை நெட்டிசன்கள் மீம்ஸ்களில் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று மாலை சென்னை பெரியார் நகரில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். அவரை உறவினர்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மாரடைப்பு காரணமாக அவர் மரணடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு வயது 84.

இன்று அதிகாலை கே.வி.ஆனந்த் மாரடைப்பில் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தாத்தா நடிகர் செல்லதுரையும் மரணமடைந்துள்ளது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News