Categories: Cinema News latest news

ரஜினி இத சொன்னதும் ஷாக் ஆயிட்டேன்! என்கிட்ட போய் இப்படி? சிங்கம் புலி பகிர்ந்த ரகசியம்

Singam Puli: எந்த ஒரு youtube சேனலைப் பார்த்தாலும் அதில் நடிகர் சிங்கம்புலியின் பேட்டி தான் வைரலாகி வருகின்றது. அதுவும் மகாராஜா படத்திற்கு பிறகு ஏகப்பட்ட சேனலுக்கு அவர் பேட்டி கொடுத்து வருகிறார். மகாராஜா படத்தில் ஒரு சபலம் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தார் சிங்கம் புலி.

அதற்கு முன்பு வரை ஒரு காமெடி நடிகராக தன்னுடைய கிண்டலான பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்து வந்தவர் சிங்கம்புலி. இன்னொரு பக்கம் ஒரு இயக்குனராகவும் அஜித்தை வைத்து ரெட் என்ற படத்தையும் கொடுத்தவர். மக்கள் மத்தியில் அவருக்கு என ஒரு நல்ல இமேஜ் இருந்தது. அது மகாராஜா படத்திற்கு பிறகு எப்படி மாறிப் போய் இருக்கிறது என்பதில் அவருக்கே ஒரு சந்தேகம்.

இதையும் படிங்க: என்ன ஒரு எளிமை! குல தெய்வ வழிபாட்டை முடித்த அர்ஜூன் மகள் மற்றும் மருமகன்.. வைரலாகும் வீடியோ

ஏனெனில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் மகாராஜா படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த கேரக்டர் அனைவரையுமே பிரமிக்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். காமெடி நடிகராகவே பார்த்த சிங்கம்புலிக்குள் வில்லத்தனமும் நன்றாக வருமோ என்ற ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் ரஜினி பற்றி ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்து இருந்திருந்தார்.

ரஜினி நடித்த ஒரு படத்தில் ஒரு காட்சி வரும். அதாவது ஒரு பாரில் அமர்ந்து வில்லனாக இருக்கும் ரகுவரன் வி.கே.ராமசாமி இவர்களுக்கு ஒரு கடிதத்தை ரஜினி எழுதுவாராம். அதில் இனி தான் ஆரம்பம் என எழுதுவாராம். கலை துறையில் இருந்து எத்தனையோ பேர் அந்த வசனத்தை ஒரு பேப்பரில் எழுதிக் காட்டி இருக்கின்றனர்.

இதையும் படிங்க:2வது பாட்டும் வியூஸ் தேறலயே!.. தங்கச்சி செண்டிமெண்ட் வொர்க் ஆகலயே!.. அப்செட்டில் வெங்கட்பிரபு!.

ஆனால் அது எதுவுமே பிடிக்கவில்லையாம். அதன் பிறகு சிங்கம்புலி ஒரு வெள்ளை பேப்பரை எடுத்து அதில் இனி தான் ஆரம்பம் என ஸ்டைலாக எழுதிக் கொடுத்திருக்கிறார். அதை ஓகே செய்துவிட்டு படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். லாங் சாட்டில் ரஜினி எழுதுவது போலவும் ஷாட்டை பக்கத்தில் வைக்கும் போது அதில் இனிதான ஆரம்பம் என்றும் காட்டப்படும்.

அதை முடித்துவிட்டு ரஜினி இது யார் எழுதியது என கேட்டாராம். உடனே சிங்கம் புலி என சொல்லி அவரை வரவழைத்து இருக்கிறார்கள். சிங்கம்புலியை பார்த்ததும்  ‘சிங்கம் புலி சிங்கம் புலி பண்ணலாமா என கேட்டு கைகுலுக்கி விட்டு இனிதான் ஆரம்பமாகப் போகிறது என சொல்லிவிட்டு சென்றாராம் ரஜினி.

இதையும் படிங்க: ‘தசாவதாரம்’ சாதனையை முறியடித்த ‘இந்தியன் 2’ – கமலுக்கு எத்தனை கெட்டப் தெரியுமா?!..

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini