ajith
Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இன்று கோலிவுட்டிலேயே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு ஒரு பெரிய உச்சத்தை அடைந்திருக்கிறார் அஜித். தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்திருக்கும் அஜித் அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தை ஆதி ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இதுவரை குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகள் பற்றி எந்த ஒரு விபரமும் தெரியவில்லை. அஜித் பெயர் மட்டுமே அந்த படத்தில் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. ஹீரோயின் உட்பட யார் நடிக்கிறார் என்பதே தெரியவில்லை.
இதையும் படிங்க: கோட் படத்துல டெலிட்டான அந்த சீன்… இதைப் போயா எடுப்பீங்க… சும்மா மாஸா இருக்கே..!
ஒரு சந்தேகத்தின் பெயரில்தான் சில பெயர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை. விடாமுயற்சி படத்தை பொருத்தவரைக்கும் முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்க வேண்டி இருப்பதாக தகவல்கள் சொல்லப்படுகின்றன.
அந்த பாடல் காட்சியையும் முடித்து விட்டால் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பிக்கப்படும். படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய நினைக்க அதே தீபாவளி அன்று மூன்று படங்கள் வெளியாக காத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு வேளை விடாமுயற்சி திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: உன்ன பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுது!.. பீச்சில் சைனிங் உடம்பை காட்டி இழுக்கும் ஷிவானி!…
ஆனால் குட் பேட் அக்லி திரைப்படம் உறுதியாக பொங்கல் ரிலீஸ் என முதலிலேயே உறுதி செய்து விட்டார்கள். அஜித்தை பொருத்தவரைக்கும் அவர் எந்த படங்களில் நடித்தாலும் அந்த படத்தின் பிரமோஷன்களில் கலந்துகொள்ள மாட்டார் என்பது அவருடைய குறிக்கோள்.
அது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தெரியும். ஏன் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவிற்கே தெரியும். ஆனால் குட் பேட் அக்லி திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அந்தப் படத்தை தயாரிப்பது ஒரு தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்.
அதனால் அவர் பிரமோஷனுக்கு வரவில்லை என்றால் இந்தப் படத்தை தெலுங்கு ஆடியன்ஸ் மத்தியில் எப்படி ப்ரோமோட் செய்வது என நினைக்க உடனே இந்த படத்தில் தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் நடிகர் சுனிலை இந்த படத்தில் நடிக்க வைப்பதாக முடிவு எடுத்திருக்கிறார்களாம். படத்தின் படப்பிடிப்பு முடியும் நேரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் சுனில் அதன் பின் படத்தில் நடிக்கும் ஹீரோயின் இவர்களை வைத்து படத்தை புரொமோட் செய்து விடலாம் என தயாரிப்பு நிறுவனம் எண்ணி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: அந்த விஷயத்தை நான் செய்யவே இல்ல… காசு கொடுங்க அதை அனுப்புறேன்… துணிச்சலாக சொன்ன கிரண்
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…