Categories: Cinema News latest news

அச்சச்சோ!.. கங்குவா படத்தால சூர்யாவுக்கு வந்த கண்டம்!.. பதறிப்போன ரசிகர்கள்.. இப்படி ஆகிடுச்சே!..

நடிகர் சூர்யா சென்னையில் கங்குவா படத்தில் நடித்து வரும் நிலையில், நேற்று இரவு எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டரில் வெளியான நிலையிலும் வசூலில் பெரிதாக கல்லா கட்டவில்லை. சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில், பல ஆண்டுகளாக பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டுக்காக போராடி வரும் சூர்யா கங்குவா படத்தை பெரிதாக நம்பி உள்ளார்.

இதையும் படிங்க: அப்படி மட்டும் பாக்காத!.. லுக்குல கிக்கு ஏத்தி சொக்க வைக்கும் மாளவிகா மோகனன்..

இந்நிலையில், அந்த படத்துக்காக பெரும் ரிஸ்க் எடுத்து ஸ்டன்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து வருகிறார். பூந்தமல்லியில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் நேற்று இரவு கங்குவா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது சூர்யாவுக்கான பில்டப் ஷாட்டுகள் படமாக்கப்பட்டு வந்தன.

அப்போது திடீரென ரோப் கேமரா ஒன்று அறுந்து விழுந்து சூர்யாவை நோக்கி வந்து அவரது தோள் பட்டையில் விழுந்து விபத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு தலையில் எல்லாம் அடி படாமல் அதிர்ஷ்டவசமாக தோள் பட்டையில் லேசான காயத்துடன் உயிர் தப்பி உள்ளார்.

இதையும் படிங்க: இவர்கள் கற்புக்கரசி கண்ணகியா?!.. மன்சூர் அலிகானுக்கு ஆதரவா களமிறங்கும் பயில்வான்…

இந்நிலையில், இன்று கங்குவா படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு நடிகர் சூர்யாவுக்கு படக்குழுவினர் ரெஸ்ட் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். 3டியில் பல மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது.

Saranya M
Published by
Saranya M