×

தல வடிவேலு உனக்கு என்னாச்சு!... புகைப்படங்களை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்....

நடிகர் வடிவேலுவின்  சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 
vadivelu
ஹைலைட்ஸ்:
சின்னத்திரையை சேர்ந்த சிலர் வடிவேலுவுடன் சமீபத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதில், சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

திரைத்துறையில் நகைச்சுவை நடிகராக ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் வடிவேலு. கவுண்டமணிக்கு பின் காமெடியில் உச்சம் தொட்டவர் அவர். தற்போது அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் இன்னும் அவரின் புகைப்படங்கள்தான் மீம்ஸ்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

vadivelu
vadivel

இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பஞ்சாயத்தால் அவருக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டு,  4 வருடங்கள் கழித்து தற்போதுதான் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. அடுத்து லைக்கா தயாரிப்பில் 2 படங்களில் வடிவேலு நடிக்கவுள்ளார். 

இந்நிலையில், சின்னத்திரையை சேர்ந்த சிலர் வடிவேலுவுடன் சமீபத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதில், சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

vadivel
vadivel

இதில் வடிவேலுவை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் அவருக்கு வயதாகிவிட்டது அதில் அப்பட்டமாக தெரிகிறது. எனவே, ‘தல வடிவேலு.. உனக்கு என்னாசு?’ என அவரின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

vadivel
vadivel

From around the web

Trending Videos

Tamilnadu News