Connect with us
vijay ajith

Cinema News

வேணாம்பா!. அஜித் ஃபேன்ஸ் ரொம்ப கலாய்ப்பாங்க!.. விஜய் நடிக்க தயங்கிய அந்த வேடம்!..

நடிகர் விஜயும், அஜித்தும் ஒரே காலகட்டத்தில் சினிமாவில் வளர்ந்தவர்கள்தான். விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் வந்தவர் என்றால் அஜித்தோ சுயமாக சினிமாவில் முன்னேறியவர். இருவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே துவக்கத்தில் காதல் கதைகளில் நடித்து ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறி பின்னால் மாஸ் ஹீரோவாக மாறியவர்கள்.

துவக்க காலங்களில் விஜய்க்கும், அஜித்துக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது. விஜய் நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் ஒரு சின்ன வேடத்தில் அஜித்தும் நடித்திருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது விஜயின் அம்மா ஷோபா அஜித்துக்கும் சேர்த்து வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வருவாராம். விஜய், அஜித் இருவரும் இணைந்தே அந்த சாப்பாட்டை சாப்பிடுவார்களாம்.

இதையும் படிங்க: விஜய்யின் கோட் படம் பற்றிய கேள்வி.. கடுப்பான மோகன்.. ஹரா டீசர் விழாவில் வாக்குவாதம்!..

ஆனால், சினிமாவில் நண்பனாக பல வருடங்கள் நீடிப்பது என்பது அரிது. ஒரு கட்டத்தில் விஜய் – அஜித் இருவரும் போட்டி நடிகர்களாக மாறினார்கள். விஜயை மறைமுகமாக திட்டி அஜித் படத்தில் பாடலும், அஜித்தை திட்டி விஜய் படத்தில் வசனமும் இடம் பெற்றது. ஆனால், ஒரு கட்டத்தில் இருவருக்கும் பக்குவம் ஏற்பட்டது.

மாஸ்டர் பட விழாவில் பேசும்போது ‘நண்பர் அஜித்’ என்றே குறிப்பிட்டார் விஜய். தற்போது இருவரும் தங்களின் பாணியில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் ரசிகர்கள் கலாய்ப்பார்கள் என்று சொல்லி ஒரு காட்சியில் விஜய் நடிக்க மறுத்த சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

இதையும் படிங்க: 6 முறை கமலுடன் மோதிய விஜய் படங்கள்… ஜெயித்தது உலகநாயகனா?.. தளபதியா?.. வாங்க பார்க்கலாம்..

செல்வபாரதி இயக்கத்தில் விஜய் நடித்து 2000ம் வருடம் வெளியான திரைப்படம்தான் பிரியமானவளே. இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது விஜயின் மனைவி சங்கீதா பிரசவத்திற்காக லண்டன் சென்றுவிட்டார். கதைப்படி சிம்ரன் கர்ப்பமாக இருப்பது போலவும் சந்தோஷத்தில் விஜய் ஒரு பாட்டு பாடுவது போலவும் காட்சி வரும். அந்த பாடலில் விஜய் பெண் வேஷம் போட்டு நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் விஜயோ ‘வேண்டாம் சார். அஜித் ஃபேன்ஸ் என்னை கிண்டலடிப்பாங்க’ என சொல்லி மறுத்துவிட்டாராம்.

vijay

அப்போதுதான் லண்டனில் அவருக்கு மகன் பிறந்திருக்கிறான் என செய்தி வந்தது. மகிழ்ச்சியடைந்த விஜய் ‘இன்று என்னை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்’ என சொல்ல விஜயை லேடி கெட்டப்பில் நடிக்க வைத்து அந்த பாடலை எடுத்திருக்கிறார் இயக்குனர். ‘ஜுன் ஜூலை மாதத்தில்’ என துவங்கும் அந்த பாடல் விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

Continue Reading

More in Cinema News

To Top