Connect with us
mgr

Cinema News

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்ததால் எம்ஜிஆர் படவாய்ப்பை இழந்த நடிகர்! – இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கா?

தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர். இவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள் ஏராளம். இவரை பின்பற்றியே இன்றளவும் பல ரசிகர்கள் பல நல்ல உதவிகளை செய்து வருகின்றனர். கோலிவுட்டிலேயே எம்ஜிஆரின் ரசிகர்கள்தான் அதிக பலம் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள். இன்று வரை வயது முதிர்ந்த யாரிடமாவது கேட்டாலும் எம்ஜிஆர் மாதிரி இன்னும் யாரும் பிறக்கவில்லை என்றுதான் கூறிவருகிறார்கள்.

ஒரு நடிகரை தெய்வமாக பார்க்கிறார்கள் என்றால் அது எம்ஜிஆரை மட்டும்தான். எம்ஜிஆரின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அவரது ரசிகர்கள் இனிப்புகளை வழங்கியும் ஏழைகளுக்கு உதவியும் செய்து வருகின்றனர். இது எம்ஜிஆரின் நல்ல குணத்திற்கு ஒரு அடையாளமாக இருந்தாலும் எம்ஜிஆருக்கு பிடிக்காத செயல்கள் என்று சில இருக்கின்றன.

mgr1

mgr1

எப்போதுமே எம்ஜிஆருக்கு கால் மேல் கால் போட்டு உட்காருவது என்பது பிடிக்காதாம். இப்படித்தான் எம்ஜிஆர் நடித்த பாக்தாத் திருடன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் பாலையா சொன்னதின் பேரில் ஒரு  நடிகர் எம்ஜிஆர் அலுவலகத்தில் காத்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது அந்த நடிகர் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தாராம். அந்த வழியாக எம்ஜிஆர் வர இந்த நடிகரை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாராம். உள்ளே போனவர் தனது உதவியாளரிடம் யார் அவர் என்று கேட்க வாய்ப்பிற்காக வந்திருக்கிறார் என்று அந்த உதவியாளர் சொல்லியிருக்கிறார். உடனே எம்ஜிஆர் வாய்ப்பு கேட்டு வரும் போதே கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறாரா? என்று சொல்லிவிட்டு,

mgr2

mgr2

தான் நாடகத்தில் நடித்தி கொண்டிருக்கும் போது இப்படித்தான் கால் மேல் கால் போட்டு உட்காருவேன் என்றும் அதை பார்த்த மூத்த நடிகர்கள் தன் தலையில் குட்டு வைத்து விட்டு போவார்கள் என்றும் அதனால் என் தலையே வீங்கிவிடும் என்றும் கூறினாராம். அதிலிருந்தே நான் இன்று வரை கால் மேல் கால் போட்டு உட்காருவதில்லை என்றும் பொது இடங்களில் நமக்கு மூத்தவர்கள் நிறைய பேர் வருவார்கள், அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக அப்படி உட்காருவதை தவிர்ப்பேன் என்றும் கூறி வந்தவரை போகச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு அந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் அசோகனை நடிக்க வைத்தாரம் எம்ஜிஆர்.

இதையும் படிங்க : எம்.ஜி.ஆர் நடித்த மறுத்த இரண்டு திரைப்படங்கள் -அதற்கு அவரே சொன்ன காரணம் இதுதான்

Continue Reading

More in Cinema News

To Top