சிவகார்த்திகேயனின் சேயோன் ஹீரோயினுக்கு பர்த்டே!.. மீசை வைத்த அழகியை பாருங்க ஓடிவந்து!..

 
சிவகார்த்திகேயனின் சேயோன் ஹீரோயினுக்கு பர்த்டே!.. மீசை வைத்த அழகியை பாருங்க ஓடிவந்து!..

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான காந்தா படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பாக்கியஸ்ரீ போர்ஸ் தற்போது திரையுலகில் புதிய கவனம் பெற்றுவருகிறார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவர் ஒப்பந்தமாகியுள்ள படக்குழுவினர் அவருக்கு வாழ்த்துக்கூறி போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

நடிகை பாக்கியஸ்ரீ போர்ஸ் யாரியன் 2 என்ற இந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து தெலுங்கில் மிஸ்டர் பச்சன், கிங்டம், ஆந்திரா கிங் தாலுகா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் காந்தா படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தை பெற்றார். இந்த படத்தில் “குமாரி” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் பாக்கியஸ்ரீ போர்ஸ் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் அவரது கரியரில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் இடையே பேசப்பட்டது. ஆனால், அந்த படமும் அவருக்கு பெரிதாக ஓடவில்லை. தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்து வந்தாலும், அவரது அழகுக்கும் நடிப்புக்கும் பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

தெலுங்கு சினிமாவில் ஆரம்பித்து, தற்போது தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் பாக்கியஸ்ரீ போர்ஸ், துல்கர் சல்மானை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் சேயோன் படத்தில் நடித்து வருகிறார்.

பாக்கியஸ்ரீ போர்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு சேயோன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. மேலும், லெனின் படக்குழுவினர் அவருக்கு அட்டகாசமான பிறந்த நாள் வாழ்த்துடன் மீசை வைத்திருக்கும் லுக்கில் ஒரு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். சேயோன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும், லெனின் படத்தில் அகில் அகினேனிக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். இவருக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அடுத்த ராஷ்மிகா மந்தனா இவர் தான் என்றும் கூறுகின்றனர்.

From Around the web