Categories: Cinema News latest news

ஆடிசன்னு கூப்பிட்டு லாக் பண்ணிட்டாங்க! ‘அசுரன்’ பட நடிகைக்கு நடந்த கொடுமை.. இவ்ளோ வேதனையா

Actress Ismath Banu: இஸ்மத் பானு அசுரன் படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். அந்த படத்தில் தனுஷின் மகனுக்கு பெண் பார்க்கிற சீன் வரும். அந்த காட்சியில் புதுப்பெண்ணாக வரும் நடிகைதான் இஸ்மத் பானு. இயல்பாகவே கரு நிறம் கொண்ட இஸ்மத் பானு அந்தப் படத்தில் கொஞ்சம் நேரம் வந்தாலும் அந்த கேரக்டர் மக்கள் மனதில் பதியும் அளவுக்கு கொடுத்திருப்பார் வெற்றிமாறன்.

ஆரம்பத்தில் நிருபராக இருந்த இஸ்மத் பானு ஒரு சில படங்களில் ரிப்போர்ட்டராக வரும் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாராம். அதன்மூலம்தான் நாமும் நடிக்கலாமே என்ற எண்ணம் இஸ்மத் பானுவுக்கு வந்திருக்கிறது. அதனால் ஏகப்பட்ட இடங்களுக்கு பைக்கில் சுற்றிக் கொண்டே இருந்தாராம் வாய்ப்புகளுக்காக. நிறைய ஆடிசன்களில் கலந்து கொள்வாவாராம்.

இதையும் படிங்க: அம்மா பாடிய பாடலை மெட்டாக்கிய இளையராஜா!.. அட அது சூப்பர் ஹிட் பாட்டாச்சே!…

ஒரு சில பேர் இஸ்மத் பானுவின் நிறம், உயரம் இவற்றை கருத்தில் கொண்டு ரிஜக்ட் செய்து விடுவார்களாம். ஆனால் அசுரன் படத்திற்கு பிறகு அப்படி ஒரு பிரச்சினை இஸ்மத் பானுவுக்கு வரவில்லையாம். அப்படி ஒரு சமயம் ஏதோ ஒரு படத்திற்காக ஆடிசனுக்கு சென்றிருக்கிறார். அந்தப் படத்தில் இரண்டாவது லீடு நடிகை கதாபாத்திரம் என சொல்லி மறுநாள் அக்ரிமெண்ட்டில் கையெழுத்து போட அழைத்திருக்கிறார்கள்.

இவரும் சந்தோஷத்தில் புது பேனா எல்லாம் வாங்கிக் கொண்டு சென்றாராம். ஆனால் அங்கு இஸ்மத் பானுவிடம் அப்படி இப்படி கொஞ்சம் இருக்க வேண்டும். என்ன கேட்கிறோமோ செய்ய வேண்டும் என கூறி தவறாக நடந்து கொள்ள பார்த்திருக்கிறார்கள். இவர் அதற்கு முடியவே முடியாது என சத்தம் போட உடனே அந்த அறையின் கதவை லாக் செய்து விட்டார்களாம்.

இதையும் படிங்க: அசால்ட் பண்ணி அடிச்சி தூக்கிய சத்யராஜ்!.. அசந்து போன விஜயகாந்த்!. அப்படி என்னதான் நடந்துச்சு?.

இருந்தாலும் இஸ்மத் பானு மிகத் தைரியத்துடன் கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி எறிந்து கதவை திறந்து கொண்டு ஓடி வந்து விட்டாராம். ஆனால் இந்த நிகழ்வுக்கு பிறகுதான் எனக்குள் மன வலிமையும் மன தைரியமும் அதிகமானது என கூறினார். அசுரன் படம் மட்டுமில்லாமல் லேபிள், ஜே பேபி, வெயில் குளிர் மழை, பொம்மை நாயகி போன்ற படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இஸ்மத் பானு.

Published by
Rohini