×

எனக்கு இன்னும் சம்பளமே தரல... பிக்பாஸ் குறித்து கஸ்தூரி காட்டாம்!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தனக்கு இன்னும் சம்பளமே கொடுக்கவில்லை - கஸ்தூரி காட்டம்

 

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்த நடிகை கஸ்தூரி கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் மரத்தை சுற்றி டூயட் ஆடிவிட்டார்.  46 வயதாகும் நடிகை கஸ்தூரி சமூகத்தில் நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் யோசிக்காமல் தனது கருத்தை வெளிப்படையாக ட்விட்டரில் பதிவிட்டு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியே பேமஸ் ஆகிடுவார். அதனாலே இவரை ட்விட்டர் கஸ்தூரி என பலரும் அழைக்கிறார்கள்.  

இந்நிலையில் தற்ப்போது பிக்பாஸ் குறித்து ஒரு ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தனக்கு இதுநாள் வரை அதற்கான சம்பள தொகையை விஜய் டிவி நிறுவனம் கொடுக்கவே இல்லை என கூறி ட்விட் போட்டு ஆதங்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்நிகழ்சியில் தான் கலந்துக்கொண்டதற்கான முக்கிய நோக்கமே ஆதரவற்ற குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு தான் ஆனால் பிக்பாஸில் இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். விரைவில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி துவங்கவுள்ள நிலையில் கஸ்தூரியின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News