khus
Mansoor Ali Khan: த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அதுவும் லியோ மேடையில் பேச வேண்டும் என நினைத்தேன். ஆனால் எதுவும் தப்பா போய்விடும் என்பதற்காக பேசவில்லை. அதனால் இப்போது பேசுகிறேன் என ஒரு பொது வெளியில் மன்சூர் அலிகான் இந்த கருத்தை கூறியிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
லியோ படத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் கண்டிப்பாக ஒரு பெட் ரூம் சீன் இருக்கும். குஷ்புவை தூக்கி, ரோஜாவை தூக்கி கட்டிலில் போட்ட மாதிரி த்ரிஷாவையும் தூக்கி போட்டிடலாம். நாம பார்க்காத ரேப்பா? எத்தனை ரேப்பை பண்ணியிருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: உதவி செய்த பெண்ணுக்கு பணம் கொடுத்த நடிகர்.. அந்த பொண்ணு சொன்னதுதான் ஹைலைட்!…
இதை அறிந்ததும் த்ரிஷா மன்சூர் அலிகானுக்கு எதிராக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார். அவர் மட்டுமில்லாமல் த்ரிஷாவிற்கு ஆதரவாக நடிகை மாளவிகா மோகன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர்.
மேலும் நடிகர் சங்கமும் மன்சூர் அலிகானுக்கு எதிராக தங்களுடைய கண்டனத்தை தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில் நடிகை குஷ்புவும் மன்சூர் அலிகான் குறித்து அவர் கருத்தை இணையதள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: சீட் கிடைக்காமல் அஜித் படத்தை நின்று கொண்டே பார்த்த சிம்பு!.. மாப்பிளைக்கு அவ்வளவு வெறியா!..
அதாவது தேசிய மகளிர் ஆணையத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் குஷ்பு மன்சூர் அலிகான் கூறிய கருத்தை அவரின் மூத்த நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறாராம். அதன் மூலம் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களாம்.
இப்படியொரு இழிவான செயலை செய்து யாரும் அவ்வளவு எளிதாக தப்பிக்க முடியாது. த்ரிஷாவுக்கு ஆதரவாக நான் உடன் நிற்கிறேன். அந்த நபர் யாரைப் பற்றியெல்லாம் பேசினாரோ அவர்களுக்கு ஆதரவாகவும் நிற்கிறேன்.
இதையும் படிங்க: இது எங்க டைம்!.. சொல்றத மட்டும் செய்ங்க!.. இயக்குனர் இமயத்துக்கே ஆர்டர் போட்ட இயக்குனர்..
பெண்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்குக் கண்ணியத்தைக் கொண்டுவரவும் நாம் போராடும்போது, இத்தகைய ஆண்கள் நம் சமூகத்தில் கேவலமான மன நிலையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என குஷ்பு மிகவும் ஆவேசமாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…