Categories: Cinema News latest news throwback stories

கமலாம்பாளுக்கு முன்னாடியே சிவாஜி என் மீது ஆசைப்பட்டார் – நடிகை பகீர் வாக்குமூலம்

சினிமாவில் நடக்கும் விஷயங்களை பற்றியும் பல அந்தரங்களை பற்றியும் தனது youtube சேனல் மூலமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி வருபவர் பிரபல பத்திரிக்கையாளரான இதயக்கனி விஜயன். இவர் இன்று அவருடைய யூடியூப் சேனல் மூலமாக ஒரு எச்சரிக்கையான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

அதுவும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் திகழ்ந்துவரும் நடிகை குட்டி பத்மினியை பற்றி ஆவேசமாக பேசியுள்ளார். அதாவது திரைத்துறையில் இருந்து கொண்டே சினிமா பிரபலங்களை பற்றி படுமோசமாக பேசி வரும் குட்டி பத்மினிக்கு இது ஒரு கடும் எச்சரிக்கை என கூறியிருக்கிறார்.

sivaji2

இதையும் படிங்க : விஜயின் அரசியல் எங்கு ஆரம்பிச்சது தெரியுமா? அப்பவே சிம்மாசனம் போட்டு உட்கார வச்சது இவர்தானாம்

மேலும் நாங்கள் ஒரு பத்திரிக்கையாளர்கள். நாங்கள் வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் சினிமாவிற்குள்ளேயே இருந்து கொண்டு சில விஷயங்கள் உண்மையாக இருந்தாலும் அதை மிக வெளிப்படையாக பேசி சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறார். அதுமட்டுமில்லாமல் குட்டி பத்மினி ஒரு சமயம் என்னிடமே வந்து சிவாஜி அவர் மீது ஆசைப்பட்டதாக கூச்சம் இல்லாமல் சொல்லி இருக்கிறார்.

சிவாஜி வயசு என்ன இந்த நடிகை வயசு என்ன. இதை இப்படி அவர் கூறலாமா? மேலும் சிவாஜிக்கு இரண்டு மனைவிகள் என்றும் கமலா இரண்டாவது மனைவி. முதலாவதாக ஒரு மனைவி இருந்ததாகவும் அவர் வீட்டில் தான் சிவாஜி பெரும்பாலும் இருப்பார் என்றும் குட்டி பத்மினி இதயக்கனி விஜயனிடம் கூறினாராம்.

இதையும் படிங்க : படுக்கையறை காட்சியெல்லாம் எனக்கு அத்துப்புடி! ஷகீலாவையே மிஞ்சிய நடிகைகள்

மேலும் எம்ஜிஆர் உடன் நம் நாடு என்ற படத்தில் நடித்த குட்டி பத்மினி உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிப்பதற்காக எம்ஜிஆர் தன்னை அழைத்ததாகவும் தெரிவித்திருக்கிறாராம். இதை எல்லாம் கேட்கும் போது காமெடியாக தெரியவில்லை? இதே குட்டி பத்மினி சமீப காலமாக எம்ஜிஆரை இழிவாகவும் பேசி வருகிறார். அதுவும் எம்ஜிஆர் ஜெயலலிதா பிரச்சினையில் ஜெய்சங்கரையும் உள்ளே நுழைத்து தேவையில்லாத பேச்சுகளை பேசி வருகிறார். இதை எல்லாம் நீடிக்க விடக்கூடாது என்று மிக ஆவேசமாக இதயக்கனி விஜயன் கூறினார்.

இப்படியெல்லாம் பேசும் குட்டி பத்மினி எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதையெல்லாம் சொல்கிறார்? அது மட்டும் இல்லாமல் எம்ஜிஆரை பற்றிய நிறைய கட்டுக்கதைகள் யூடியூப் சேனலில் வந்து கொண்டு இருப்பதாகவும் பிரபல தயாரிப்பாளராக சித்ரா லட்சுமணனும் இதைப் பற்றி பேசி வருகிறார். அவரிடமும் என்ன ஆதாரம் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார் இதயக்கனி விஜயன்.

sivaji3

இதையும் படிங்க : இத்தனை ஆயிரம் கோடி சொத்தா?!.. விபத்தில் சிக்கியும் சாதித்து காட்டிய அரவிந்த் சாமி!..

குட்டி பத்மினி இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறார் என்றால் அவர் எப்படி சம்பாதித்தார் என்பதை எனக்கு தான் தெரியும் என்றும் அதையெல்லாம் சொன்னால் அவர் வெளியில் நடமாட முடியாது என்றும் இனி மேல் இந்த மாதிரி பேசிக் கொண்டே போனால் குட்டி பத்மினியை பற்றிய உண்மைகளை நான் வெளியே சொல்லி விடுவேன் என்றும் மிரட்டும் தொணியில் பேசி இருக்கிறார் இதயக்கனி விஜயன்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini