Categories: Cinema News latest news

‘பில்லா’ படத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்! 16 வருஷம் கழிச்சு வெளிச்சத்திற்கு வந்த உண்மை

Namitha Ajith: மே1 அஜித் பிறந்தநாள் ஆன நேற்று அவர் நடித்த சூப்பர் ஹிட் படங்களான பில்லா, தீனா போன்ற படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. அஜித் ரசிகர்கள் உட்பட பல ரசிகர்களும் அஜித்தின் படங்களை கூட்டம் கூட்டமாக வந்து பார்த்ததை அனைத்து பத்திரிகைகளும் செய்திகளாக வெளியிட்டன. அதில் அஜித் ரசிகர்கள் உச்சகட்டமாக சென்று திரையரங்கிற்குள் பட்டாசுகளை வெடித்தும் ஏற்கனவே ரீ ரிலீஸ் ஆன கில்லி படத்தின் போஸ்டர்களை கிழித்தும் அட்டகாசங்கள் செய்ததை நாம் பார்க்க முடிந்தது.

அந்த அளவுக்கு அஜித் மீது அவருடைய ரசிகர்கள் வெறிகொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் அஜித் கெரியரில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் பில்லா திரைப்படம். அது அஜித்துக்கு மட்டும் இல்லாமல் நயன்தாராவையும் தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற படமாக அமைந்தது. இந்த படத்தில் பிகினி உடையில் வந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார் நயன்தாரா.

இதையும் படிங்க: தாமரையை மலர வைக்கும் முயற்சியா இது? தயாராகப் போகும் அண்ணாமலை பயோபிக்.. ஹீரோ யார் தெரியுமா

அதிலிருந்தே எல்லா படங்களிலும் படு ஸ்டைலாக நடித்து இன்று லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் பில்லா படம் குறித்து நடிகை நமீதா ஒரு சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது அஜித்தும் நானும் ஒரே மாதிரியான டைப். அவரும் கொஞ்சம் ரிசவர்ட். நானும் ரிசவர்ட். அவ்வளவு சீக்கிரம் எளிதாக யாரிடமும் பேச மாட்டோம் என்று அஜித்துடன் ஒப்பிட்டு நமீதா இந்த தகவலை பகிர்ந்தார்.

மேலும் அஜித்தின் பழக்கம் என்னவெனில் அவருடைய ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அனைவருக்கும் பிரியாணி செய்து கொடுப்பது வழக்கம். இதைப்பற்றி நமீதாவிடம் கேட்டபோது ஆச்சரியத்துடன் அவர் அப்படியா என கேட்டார். ஏனெனில் நமீதா பில்லா படத்தில் நடிக்கும் வரை அந்த மாதிரி ஒரு சம்பவம் நடக்கவே இல்லையாம்.

இதையும் படிங்க: இது செம ஆஃபரே இருக்கே!. வாயடைத்து போன மகாநதி சீரியல் நடிகை!.. வீடியோ பாருங்க!..

ஒரு வேளை நான் செட்டில் இல்லாத போது அவர் செய்து கொடுத்திருக்கலாம். ஆனால் இப்போது அது சம்பந்தமான பல புகைப்படங்களை நான் சோசியல் மீடியாவில் பார்க்கிறேன். என நமிதா கூறினார். மேலும் பில்லா படத்திற்கு முன்பும் பில்லா படத்திற்குப் பின்பும் அஜித்தை இதுவரை நமீதா பார்க்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் நடிக்கும் போது மட்டுமே பார்த்திருக்கிறாராம்.

Published by
Rohini