Categories: Cinema News latest news

இந்திய சினிமாவிலேயே மிகச்சிறந்த நடிகை! ‘சூர்யா 44’ல் களமிறங்க ரெடியாகிட்டாங்க

Surya 44: கோலிவுட்டில் மிகச்சிறந்த நடிகர் சூர்யா. தற்போது குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகி இருக்கும் சூர்யா படங்களில் நடித்து வருவதில் கவனம் செலுத்தியும் வருகிறார். அதே சமயம் ஹிந்தியிலும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இன்னொரு பக்கம் அவருடைய காதல் மனைவியான ஜோதிகாவும் ஹிந்தியில் படங்களில் நடிக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். சூர்யா ஜோதிகா இருவருமே சினிமாவில் ஒரு மிகச்சிறந்த தம்பதிகளாக இன்றுவரை வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதையும் படிங்க: ப்ரோமோஷனுக்கு வரலைனா எங்க பொழப்பு என்னாகுறது? அஜித்தால் இப்படி ஒரு முடிவா?

உடற்பயிற்சி நிலையத்தில் இருவரும் சேர்ந்து வொர்க் அவுட் செய்யும் வீடியோக்கள் பல வெளியாகி சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி இருக்கின்றது. அதை பார்த்த பலரும் இப்படி ஒரு தம்பதிகளா என ஆச்சரியப்பட்டு கொண்டிருக்கின்றனர். தற்போது சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே அவர் நடித்து ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கங்குவா. அந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். படம் 12 மொழிகளில் ரிலீசாக இருக்கின்றது .மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்ட கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் என உறுதி செய்து இருந்தார்கள்.

இதையும் படிங்க: மேனன் கேரக்டரில் முதலில் இந்த நடிகரைதான் யோசிச்சேன்… ஆனா? வெங்கட் பிரபு சொன்ன சீக்ரெட்

ஆனால் அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆகுவதால் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சூர்யா அவருடைய 44ஆவது படத்தில் அதாவது கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து மும்முரமாக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் கூட இந்த படத்தில் நடிக்கும் போது அவருடைய தலையில் ஒரு விபத்து ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சை முடிந்து மீண்டும் அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் சூர்யா. ஏற்கனவே இந்த படத்தில் நடிகை ஸ்ரேயா ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதாக ஒரு தகவல் வெளியானது.

இதையும் படிங்க: கோட் படத்துல டெலிட்டான அந்த சீன்… இதைப் போயா எடுப்பீங்க… சும்மா மாஸா இருக்கே..!

nandhitha

இந்த நிலையில் மீண்டும் சூர்யா 44 திரைப்படத்தில் ஒரு முக்கியமான நடிகை இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய சினிமாவில் மிகச்சிறந்த நடிகைகளின் பட்டியலில் இந்த நடிகையின் பெயர் இடம்பெறாமல் இருக்காது. அவர் வேறு யாரும் இல்லை நந்திதா தாஸ். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் நடித்தவர் தான் நந்திதா தாஸ். இவர் சூர்யா 44 திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini