Connect with us
nazriya

Cinema News

பகத் பாசில் வீட்ல பண்றதெல்லாம் பார்த்தா பயமா இருக்கும்!.. நஸ்ரியா கொடுத்த அதிர்ச்சி பேட்டி!..

மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பிரியதர்ஷனின் மகன் பஹத் பாசில். ஒரு ஹீரோவுக்கான எந்த உடலமைப்பும், முகமும் இல்லாதவராகத்தான் இவர் சினிமாவில் நுழைந்தார். வழக்கமான ஹீரோக்களை போல 4 சண்டை, 4 பாடல் காட்சிகள், கதாநாயகியுடன் டூயட் என வழக்கமான ரூட்டுக்கு போகாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார்.

அதிலும், பொதுவாக மற்ற நடிகர்கள் ஏற்று நடிக்க தயங்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதுதான் அவரின் பலம். முகத்தில் பல வித பாவணைகளையும் காட்டி அசத்தலாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இப்படியெல்லாம் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க முடியுமா என ஆச்சர்யம் கொடுத்தார்.

இதையும் படிங்க: என் பாட்டை நானே கேட்க மாட்டேன்… எவர்கிரீன் ஹிட் கொடுத்த மோகனா இப்படி சொல்றாரு?

அதற்கு டிரான்ஸ், ஜோஜி உள்ளிட்ட பல படங்களை உதாரணமாக சொல்ல முடியும். சமீபத்தில் கூட இவரின் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் வேலைக்காரன், விக்ரம், மாமன்னன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ரஜினியுடம் வேட்டையன் படத்திலும் நடித்து வருகிறார்.

விக்ரம், மாமன்னன் படம் மூலம் இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். சமீபத்தில் தனக்கு ஏ.டி.ஹெச்.டி நோய் இருப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இந்த நோய் வந்தால் கவனக்குறைபாடு, ஞாபக மறதி போன்ற பாதிப்புகள் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

fahath

fahath

இந்நிலையில், பஹத்பாசிலின் மனைவியும், நடிகையுமான நஸ்ரியா ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் ‘திருமணமான புதிதில் பஹத்தின் நடவடிக்கைகளை பார்த்து பயந்தேன். ஏனெனில், ஒரு படத்தில் நடித்து விட்டு அந்த கதாபாத்திரத்திலிருந்து வெளியே வரமுடியாமல் தவிப்பார். பாத்ரூமில் சத்தம் போட்டு கத்துவார். கண்ணாடி முன்பு சத்தம் போட்டு சிரிப்பார்’ ஒரு கட்டத்தில் எனக்கு அது பழகிவிட்டது என சொல்லி இருக்கிறார்.

நஸ்ரியா ஒரு நடிகை என்பதால் பஹத் பாசிலின் பிரச்சனையை புரிந்துகொள்ளும் பக்குவம் அவருக்கு இருக்கிறது. இப்போது அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படத்திலும் பஹத்பாசில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என கணிக்கப்படுகிறது.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top