என் பாட்டை நானே கேட்க மாட்டேன்... எவர்கிரீன் ஹிட் கொடுத்த மோகனா இப்படி சொல்றாரு?
நடிகர் மோகனின் 'ஹரா' படம் நாளை வெளியாகிறது. இதையொட்டி பல்வேறு ஊடகங்களில் அவரது பேட்டி வந்த வண்ணம் உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன் நடித்து வெளிவரும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
80களில் தமிழ்த்திரை உலகைக் கலக்கியவர். இவர் படங்கள் என்றாலே அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட்டாகத் தான் இருக்கும். இளைஞர்களின் காதல் பாடல்கள், காதல் தோல்வி பாடல்கள் என்றாலே அது மோகனின் ஹிட்ஸாகத் தான் இருக்கும்.
இவர் தனது பாடலை கேட்க மாட்டாராம். இது என்னடா புதுக்கதையா இருக்குன்னு பார்த்தால் நமக்கே ஆச்சரியமாக உள்ளது. வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
நான் நடிச்சதுலயே நாலஞ்சு பாடல்கள் தான் மைக் புடிச்சே பாடுவேன். கடவுளோட ஆசிர்வாதம். இயக்குனர் மெனக்கிட்டு மியூசிக் டைரக்டர்கிட்ட வேலை வாங்கின விஷயங்கள். அதுக்கு அப்புறம் அதை மக்கள்கிட்ட கனெக்ட் பண்ணி வைக்கிறதுன்னு ஒண்ணு இருக்கு.
நான் ஒர்க் பண்ணின டைரக்டர் எல்லாம் அத்தனை பேரும் சூப்பர் டைரக்டர்ஸ். இப்ப கூட ஹரா படத்துல 'மகளே சாங்' வைரலா போய்க்கிட்டு இருக்கு. எல்லாம் கடவுளின் ஆசிர்வாதம் தான். பேசிக் டைரக்டர், மியூசிக் டைரக்டர், தயாரிப்பாளர் இவர்கள் தான் பாடல்கள் பிரபலமானதற்குக் காரணம்.
பொதுவா என் பாடல்களைக் கேட்க மாட்டேன். சூட்டிங்கிற்கு அப்புறம் கேட்கறது. இப்போதைக்குக் கேட்கறது 'மகளே என் மகளே' தான் நான் சொல்வேன். அடுத்த படத்துல எது வருமோ அதைத் தான் நான் சொல்வேன்.
மகளே என் மகளே பாட்டுல அப்பா, பொண்ணோட எமோஷன் பத்தி ரொம்ப நல்லா எழுதிருக்காரு டைரக்டர் விஜய். டிராவல் பண்ணும்போது இளையராஜா, எம்எஸ்வி, ஏ.ஆர்.ரகுமான் என எல்லாரோட பாடல்களையும் கேட்பேன். இது தான் உண்மை. என் பாட்டுக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கும், தாய்மார்களுக்கும் நன்றி. எல்லாவற்றுக்கும் மேலா கடவுளின் ஆசிர்வாதம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.