எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டியே!.. நடிகையின் போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்...
Fri, 5 Feb 2021

வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படத்தில் நடிகர் பசுபதிக்கு ஜோடியாக நடித்தவர் பிரியங்கா நாயர். தாவனி பாவாடை, குண்டு கண்கள் என அவரின் அழகு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. எனவே, ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்த்த நிலையில், தொலைப்பேசி, திருத்தம் என சில படங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களிடம் க்ளிக் ஆகவில்லை. எனவே, தாய் மொழியான மலையாளத்தில் சில படங்களில் நடித்தார். அதன்பின் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உடலில் எடை போட்டு குண்டாக இருக்கும் அவரை கண்ட ரசிகர்கள் ‘எப்படி இருந்த நீ இப்படி மாறிட்டியே!’ என பதிவிட்டு வருகின்றனர்.