திரையில் சிரித்த முகம்.. நிஜத்தில் நடந்த கொடூரம்! குட் நைட் நடிகைக்கு நடந்த சம்பவம்!

 
திரையில் சிரித்த முகம்.. நிஜத்தில் நடந்த கொடூரம்! குட் நைட் நடிகைக்கு நடந்த சம்பவம்!

தமிழ் சினிமாவில் எந்தவித சினிமாப் பின்னணியும் இல்லாமல், தனது இயல்பான மற்றும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை ரேச்சல் ரெபேக்கா. குட் நைட் திரைப்படத்தில் நடிகர் மணிகண்டனின் அக்காவாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்ற அவர், சமீபத்தில் வெளியான 'தாய்க்கிழவி' உள்ளிட்ட படங்களிலும் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருப்பார்.

இந்த நிலையில் ரேச்சல் ரெபேக்காவின் வாழ்க்கையில், மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்த ஒரு பதைபதைக்கும் கொடூர சம்பவத்தை சமீபத்தில் பகிர்ந்தார்.

ரேச்சல் ரெபேக்கா தனது கடந்த காலம் குறித்துப் பேசுகையில், என்னை ஒருவன் ஒருதலையாகத் தீவிரமாகக் காதலித்து வந்தான். ஆனால், நான் அவனது காதலை ஏற்க மறுத்துவிட்டேன். இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்தக் கொடூரன், ஒருநாள் திடீரென எங்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என்னையும் என் அம்மாவையும் கத்தியால் சரமாரியாக வெட்டினான். அந்தத் தாக்குதலில் எனக்குப் பல இடங்களில் ஆழமான வெட்டுக் காயங்கள் விழுந்தன. என் உடலில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறி, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தேன்.

என் அப்பா தனது வாழ்நாளில் நிறைய பேருக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பல்வேறு உதவிகளைச் செய்திருந்தார். நான் மருத்துவமனையில் உயிருக்குச் போராடிக் கொண்டிருந்தபோது, என் அப்பா செய்த அந்த நன்மைகள் தான் எனக்குப் பெரிய அளவில் கைகொடுத்தன. அவர் உதவி செய்த பல மனிதர்கள் தாமாகவே முன்வந்து எனக்கு ரத்தம் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த ரத்தத்தாலும், அந்த நல்ல மனிதர்களாலும்தான் இன்று நான் உயிருடன் உங்கள் முன்னால் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று தனது பேட்டியில் ரேச்சல் ரெபேக்கா தெரிவித்துள்ளார்.

From Around the web