×

சித்தி-2 சீரியலுக்கு குட் பை சொன்ன ராதிகா.. அடுத்தது அதுதானாம்!...

 

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி குணச்சித்திர நடிகையாக பல படங்களில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் ராதிகா. தற்போதும் தெலுங்கு, தமிழ் என மாறி மாறி நடித்து வருகிறார். ஒருபக்கம், சின்னத்திரையில் சித்தி 2 சீரியலிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே, சித்தி, அண்ணாமலை ஆகிய சீரியல்கள் இல்லத்தரசிகளிடம் பிரபலமானதால் தற்போது சித்தி 2 நடித்து வருகிறார். இந்த சீரியலும் சன் டிவியில் அதிக டி.ஆர்.பியை பெற்று வருகிறது.

இந்நிலையில், சித்தி 2 சீரியலில் இருந்து தான் வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘சோகம், மகிழ்ச்சி என இரண்டும் கலந்த மனநிலையில் இருக்கிறேன். என்னுடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பிரிவது கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் நன்றி. சித்தி சீரியலை தொடர்ந்து பாருங்கள்’ என பதிவிட்டுள்ளார். மேலும், அடுத்தது நான் செய்யப்போவது சிறந்ததாக அமையும் எனவும் கூறியுள்ளார்.

எனவே, சித்தி 2 சீரியலில் ராதிகாவுக்கு பதில் வேறு நடிகை நடிப்பார் எனத் தெரிகிறது. மேலும், கணவர் சரத்குமாரின் சமத்துவ கட்சியில் களம் இறங்கி அரசியலில் அவர் தீவிரமாக செயல்படவுள்ளார் எனக்கூறப்படுகிறது.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News