
Cinema News
கேப்டன் பிரபாகரனில் ரம்யா கிருஷ்ணன் வேடத்தில் நடிக்கவிருந்த நடிகை!.. நல்லவேளை அவர் நடிக்கல!..
Published on
By
விஜயகாந்தின் 100வது திரைப்படம் கேப்டன் பிரபகாரன், ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான், ரூபினி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
1991ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. சந்தன கடத்தில் வீரப்பனின் கதையை அடிப்படையாக வைத்து விறுவிறுவென திரைக்கதை அமைந்திருந்தார் ஆர்.கே.செல்வமணி. ரஜினி,கமல், விக்ரம், கார்த்தி போன்ற நடிகர்களின் 100வது திரைப்படங்கள் தோல்வி அடைந்த நிலையில் விஜயகாந்துக்கு மட்டுமே வெற்றிப்படமாக அமைந்தது.
captain
இப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தாலும் இரண்டுமே ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது. அதிலும், ரம்யா கிருஷ்ணன் நடமாடிய ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் அதிரி புதிரி ஹிட் ஆனது. இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார். படத்தின் துவக்கத்தில் மட்டுமே சரத்குமார் வருவார். சரத்குமாருக்கும், ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையே காதல் மலர்வது போலவும், வில்லன் மன்சூர் அலிகானிடம் சிக்கி சரத்குமார் உயிர்விடுவது போலவும் காட்சிகள் காட்டப்பட்டிருக்கும்.
saranya
தன் காதலை கொன்ற வில்லனை பழிவாங்க துடிக்கும் வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார். முதலில் இந்த வேடத்தில் நடிக்க செல்வமணி அணுகியது நடிகை சரண்யா பொன்வண்ணனை. ஆனால், கவர்ச்சியான உடைகளை அணிய வேண்டியிருந்ததால் அதில் நடிக்க அவர் மறுத்துவிட்டாராம். அதன்பின்னரே ரம்யா கிருஷ்ணன் உள்ளே வந்துள்ளார்.
ரம்யா கிருஷ்ணன் கவர்ச்சி காட்டுவதிலும் சரி, நடனமாடுவதிலும் சரி.. எல்லாவற்றையும் அசத்தலாக செய்துவிடுவார். ஆனால், சரண்யா அப்படி இல்லை. எனவே, நல்லவேளை அவர் நடிக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்.
சரண்யா தற்போது பல திரைப்படங்களிலும் அம்மா வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: படப்பிடிப்பில் நடந்த தீவிபத்து!.. ஒட்டம் பிடித்த நடிகர்.. தன்னந்தனியாக நின்ன நடிகை!..
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி...
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...
Idli kadai: சில சமயம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்து புதிதாக ரிலீசான திரைப்படத்தை விட அந்த படத்தோடு வெளியான...
Vijay: கரூரில் 41 உயிர்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் விஜய் மீதான விமர்சனம், தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கின்றது....
Kantara 2 : ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான காந்தாரா திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு,...