Categories: Cinema News latest news

கண்ட நாய்ங்க கூடலாம் படுக்கக்கூடாது!.. ஹீரோயின்கள் குறித்து பேசிய ரேகா நாயர்!..

சின்ன திரையில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேகா நாயர். பல காலங்களாக இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ரேகா நாயர்.

சின்ன திரையில் வம்சம்,ஆண்டாள் அழகர்,பகல் நிலவு, பால கணபதி ஆகிய சீரியல்களில் இவர் நடித்துள்ளார். மேலும் கலர்ஸ் தமிழ், புதுயுகம் போன்ற சேனல்களில் தொகுப்பாளராக பணிப்புரிந்து வருகிறார். சீரியலில் நடிக்கும்போதே தமிழ் சினிமாவிலும் முயற்சித்து வந்தார் ரேகா.

பல பேட்டிகளில் இவர் தொடர்ந்து சினிமா குறித்து பல சர்ச்சையான விஷயங்களை வெளியிட்டு வருகிறார். சினிமாவில் பெண்களுக்கு இருக்கும் அவல நிலை குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். சினிமாவில் ஹீரோயின்களுக்கு அட்ஜெஸ்மெண்ட் இருக்குறது உண்மையா? என ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது.

ரேகா அளித்த சர்ச்சை பதில்:

அதற்கு பதிலளித்த ரேகா, “கண்டிப்பாக சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கிறது. அதை கதாநாயகிகளும் ஏற்றுக்கொள்கின்றனர். பெரும் நட்சத்திரம் ஆகலாம், நிறைய பணம் கிடைக்கும், சென்னையில் ஒரு வீடு வாங்கலாம் என்பதற்காக இதை எல்லாம் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

rekha nair 3

ஏனெனில் அவர்கள் கூறாமல் இந்த விஷயங்கள் வெளி உலகிற்கு தெரியாது. ஆனால் இந்த மாதிரியான தொழில் செய்வதற்கு வேறு இடங்கள் உள்ளன. அங்கு சென்று அவர்கள் இதை செய்யலாம். என் வாழ்க்கையில் தண்ணி அடிக்க கூடாது, கண்ட நாய்ங்க கூட படுக்க கூடாது என என் வாழ்க்கையை நாந்தான் முடிவு செய்கிறேன். கதாநாயகிகளும் அப்படிதான் இருக்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார் ரேகா நாயர்.

இதையும் படிங்க: ரத்தக்கண்ணீர் கெட்டப்பில் இருந்த எம்.ஆர்.ராதாவை எத்தி உதைக்க தயங்கிய நடிகை… ஓஹோ இதுதான் விஷயமா?

 

 

Rajkumar
Published by
Rajkumar