×

அடுத்த 48 நாட்களுக்கு ஆழ்ந்த தியானத்தில் நடிகை சமந்தா!

நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் "48 நாட்கள் ஈஷா கிரியா யோகம் கடைபிடித்து தியானம் செய்யபோவதாக தெரிவித்துள்ளார். தியானத்தை இன்று முதல் இன்று துவங்கியுள்ள சமந்தாவுடன் அவரது செல்ல நாய் ஹாஷ் அமர்ந்து தியானம் செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

 

அதில்,  " தியானம் செய்வதால் மனம் அமைதியடைவதுடன் முகம் பொலிவாகும், அகமும் தெளிவாகும்" என  கேப்ஷன் கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் சமந்தா வீட்டில் இருந்தபடியே சிறிய அளவிலான முட்டைகோஸ் விவசாயம் செய்து சமீபத்தில் அறுவடை செய்தார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News