×

எந்த நடிகரும் அப்படி கூறியதில்லை! - விவேக்கை பற்றி நெகிழும் ஷகிலா...

 
எந்த நடிகரும் அப்படி கூறியதில்லை! - விவேக்கை பற்றி நெகிழும் ஷகிலா...

நகைச்சுவை நடிகர் விவேக் சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் மரணம் தமிழ் சினிமா உலகம் மற்றும் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் நினைவாக, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடிகர், நடிகையர் பலரும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். பலரும் அவரை பற்றிய நினைவுகளை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ஷகிலா பகிர்ந்த விஷயம் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மலையாளத்தில் நான் நடித்த திரைப்படங்களுக்கு கூட்டம் கூடியதால் என்னை அங்கிருந்து விரட்டி விட்டனர். என்னிடம் கூறிய விவேக் ‘நீ தமிழ் பெண் என்பதால்தான் உன்னை கேரளாவில் இருந்து விரட்டி அடித்தனர். அதனால்தான் அவர்களுக்கு நான் கால்ஷீட் கொடுப்பதில்லை’ என என்னிடம் கூறினார். எந்த நடிகரும் என்னிடம் அப்படி கூறியதில்லை. அதனால்தான் அவரின் மகன் இறந்த போது சென்றேன். தற்போது செல்ல விருப்பமில்லை. ஏனெனில், அவரின் மனைவியின் முகத்தை பார்க்கும் சக்தி எனக்கு இல்லை என அவர் தெரிவித்தார்.

நடிகை ஷகிலா குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News